இன்றைய மருத்துவ சிந்தனை (18.01.2017) பிரண்டைக் கீரை

பிரண்டை இலையுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால்
இன்றைய மருத்துவ சிந்தனை (18.01.2017) பிரண்டைக் கீரை
Updated on
1 min read

பிரண்டை இலையுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், உடல் எரிச்சல் போன்றவை விலகும்.

பிரண்டைத் தண்டுடன், வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு, மஞ்சள்ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கி குடித்து வந்தால் இதய நோய்கள்குணமாகும்.

பிரண்டை இலை , முடக்கத்தான் இலை ,சீரகம் மூன்றையும் தலா 10 கிராம் அளவுஎடுத்து அரைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் மூட்டூ வலி , மூட்டுத் தேய்வு , இடுப்பு வலி போன்ற குறைகள் தீரும்.

பிரண்டையை  இடித்துச் சாறு எடுத்து, அதில் சிறிது பெருங்காயம் சேர்த்துச்சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குப் பிரச்சனைகள் சரியாகும்.

பிரண்டையைக் கணு மற்றும் நார் நீக்கி ,நெய்யில் வதக்கி ,மிளகு ,உப்பு சேர்த்துச்சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பெருக்கும்.

உலர்ந்த பிரண்ட இலையை (100கிராம்), சுக்கு (10 கிராம்), மிளகு(10 கிராம்) ஆகியவற்றுடன் சேர்த்துப் பொடியாக்கி ,தினமும் காலையில் 2 கிராம் அளவிற்குசாப்பிட்டு வந்தால் குடற் புண் , தொண்டைப் புண் , ஆசனப் புண் போன்றஅனைத்தும் குணமாகும்.

KOVAI  HERBAL CARE

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist

Cell  :  96557 58609

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com