

தண்டுக் கீரையுடன் உளுந்து, மஞ்சள் இரண்டையும் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் நரம்புக் கோளாறுகள் சரியாகும்.
தண்டுக் கீரையுடன் மிளகையும், மஞ்சளையும் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்பு கரையும்.
தண்டுக் கீரையுடன் சிறுபருப்பு, பூண்டு இரண்டையும் சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எரிச்சல் தீரும்.
தண்டுக் கீரையுடன் நெல்லிச் சாறு சேர்த்து அரைத்து சாறு எடுத்து, சாற்றுக்கு சமமாக தேன் கலந்து காய்ச்சி இறக்கி தினமும் இரண்டு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் குணமாகும்.
தண்டுக் கீரையுடன், சீரகம், மஞ்சள் மற்றும் பார்லியைச் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். நீர் எரிச்சல், நீர் கடுப்பு மறையும். சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
தண்டுக் கீரை, துத்தி இலை,சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் மூல சூடு உள்ளிட்ட மூலம் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளும் குணமாகும்.
கோவை ஹெர்பல் கேர்
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.