வாதநாராயணன் கீரையைக் காயவைத்துப் பொடி செய்து, ஐந்து கிராம் பொடியை சுடுநீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வாயுத்தொல்லை தீரும்.
வாதநாராயணன் கீரை, வெள்ளை வெங்காயம் இரண்டையும் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து அரைத்து எலுமிச்சம் பழ அளவுக்குச் சாப்பிட்டால், இரண்டு மூன்று முறை பேதியாகி வாதம் தணியும். கால் மூட்டு, இடுப்பு மற்றும் தண்டுவடப் பிரச்சனைகளும் தீரும்.
வாதநாராயணன் கீரையை கேழ்வரகு மாவில் சேர்த்து தோசை செய்து சாப்பிட்டுவந்தால் மூட்டு வலி, இடுப்பு வலி குணமாகும்.
வாதநாராயணன் கீரையுடன் சுக்கு, ஒமம் , சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் குணமாகும்.
வாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் பூண்டு (3பல்), சுண்டைக்காய், பெருங்காயம், விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி அரைத்துச் சாப்பிட்டு வந்தால் முடக்கு வாதம், விரை வாதம் குணமாகும்.
வாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கஷாயமாக்கி சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவை குணமாகும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.