முள்ளங்கி மகத்துவம்!

தினமும் பச்சை முள்ளங்கியைச் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம்  சீராக இயங்கும்.
முள்ளங்கி மகத்துவம்!
Published on
Updated on
1 min read


தினமும் பச்சை முள்ளங்கியைச் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம்  சீராக இயங்கும்.

முள்ளங்கிச் சாறு, முள்ளங்கி இலைச்சாறும் கலந்து அதில் சர்க்கரை சேர்த்து தினமும் இரு வேளைகள் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமாகும்.

முள்ளங்கியைச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து 3 வேளை குடிக்க நீர்ச்சுருக்கு நீங்கும்

சுப வாதங்களைத் தணிக்கும். முதிர்ந்த முள்ளங்கியை விட இளம் முள்ளங்கியே நன்மை தருவதாக இருக்கும். முதிர்ந்த முள்ளங்கி வீக்கத்தையும், அழற்சியையும் தோற்று விக்கும். ரத்தத்தை கெடுக்கும். உலர்ந்த முள்ளங்கி 3 தோஷங்களையும், நஞ்சையும் போக்கவல்லது. முள்ளங்கி காய்ச்சல், இழுப்பு, மூக்கு, கண், தொண்டையில் தோன்றும் நோய்கள் ஆகியவற்றையும் போக்கும்.

முள்ளங்கியை பச்சையாகவோ, சமைத்தோ உண்பதால் சுவையின்மை நீங்கிப் பசி உண்டாகும். உணவையும் சீரணமாக்கும்.

பச்சை முள்ளங்கியை சாறு பிழிந்து சிறிது இந்துப்புச் சேர்த்து பொறுக்கும் அளவிற்கு காய்ச்சி வடிகட்டி காதில் 2 சொட்டுவிட காது குத்தல், காது வலி, காதில் சீழ் வடிதல் குணமாகும்.

முள்ளங்கியை தினமும் உணவில் சாப்பிட்டு வர மூலம், மூத்திரக் கல்லடைப்பு குணமாகும்.

பூச்சிக்கடிகளுக்கு முள்ளங்கியை அரைத்துப் பற்றுப் போட குணமாகும்.

- நெ.இராமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com