ஆஸ்துமா நோயாளிக்கு மிகவும் சிறந்த உணவு எது?

மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்தக் கிவி பழம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
ஆஸ்துமா நோயாளிக்கு மிகவும் சிறந்த உணவு எது?

கிவி பழத்தில் ஏராளமான வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் உள்ளன. சிட்ரஸ் ரக பழ வகையை சார்ந்த கிவி பழம் உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், உடலுக்கு சிறந்த பழமாகும். கிவி பழத்தில் ஜிங்க் அமிலம் இருப்பதால் தோல், முடி, பல் மற்றும் நகங்களுக்கு சிறந்தது. கிவி பழத்தில் வைட்டமின் ஈ அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளது. இதனால் ஆன்டிஆக்ஸிடன்ட் என்னும் அமிலம் அதிகமாவதால் ஆரோக்கியமான இதயத்தையும் தருகிறது. போலிக் என்னும் அமிலம் கிவி பழத்தில் அதிகமாக  இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் சிறந்தது.

இப்படி பல வகையான சத்துக்கள் மிகுந்த கனிகளில் சிறந்த கனியாகக் கருதப்படுகின்றது. ஒமேகா-3 கொழுப்பு அமிலமும், ஃபோலேட் என்ற சத்தும் மற்ற பழங்களை விட மிகவும் அதிகமான அளவில் கிவி பழத்தில்  உள்ளது. இத்தகைய சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு சிறந்த பழமாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 

வைட்டமின் ‘சி’சத்தை அதிக அளவில்  கொண்டுள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கும். மனித உடலில் கட்டுப்பாடு இல்லாமல் திரியும் ‘ரேடிக்கிள்ஸ்’(Free radicals) தான் பல்வகையான நோய்களுக்கும், செல்களின் சிதைவிற்கும் அடிப்படைக் காரணங்களாக அமைகிறது. இத்தகைய ரேடிக்கிள்ஸ்களின் வீரியத்தை குறைத்து அல்லது அழித்து நோயின்றி உடலை காக்கும் ஆற்றல் கிவி பழத்திற்கு உள்ளது. சில மனிதர்களுக்கு ஏற்படும் மூச்சுத் திணறல் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவாகச் செயல்படுகின்றது கிவி பழம். மேலும் நுரையீரல்கள் செயல்திறனை அதிகரிக்க இந்தக் கனி பயன்படுகின்றது. 

சில ஆண்டுகளுக்கு முன்னர் ரட்ஜர் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த உணவியல் வல்லுநர்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வகையான கனிகளிடம், கிவியின் ‘சத்து அடர்வு நிலை’ பற்றி விரிவான ஆய்வு ஒன்று நிகழ்த்தப்பட்டது. அப்போது அவர்கள் ஆய்வு செய்த 18 வகையான கனிகளில் அதிக அளவு சத்துக்கள் பொதிந்த சிறந்த கனியாக கிவியைக் கருதுகின்றார்கள். இத்தகைய ஆய்வு முடிவை இவர்கள் அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கும் The Journal of American College of Nutrition என்ற உணவியல் இதழில் விரிவான ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வுக் கட்டுரையின் முக்கிய தகவல்கள்:

உணவு, மருந்துக் கட்டுப்பாடு அமைப்பானது, ஒரு மனிதன் நலமாக வாழ வேண்டுமென்றால் அவனுக்கு குறைந்தது 9 வகையான முக்கிய சத்துக்கள் அன்றாட உணவில் தேவைப்படுகின்றது. இத்தகைய சத்துக்களை ஒரு தனிமனிதன் பெற வேண்டுமென்றால் அவன் அன்றாட உணவில், பல்வகையான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். ஆனால், இந்த 9 வகையான சத்துக்களும் ஒருசேர கிவி என்ற கனியில் பொதிந்துள்ளது என குறிப்பிடுகின்றார்கள்.உணவியல் குறியீட்டில் கனிவகைகளில் அதிக எண்ணை உடைய கனியாக கிவி கருதப்படுகின்றது.

உணவியல் வல்லுநர்கள் கனிகள் வகைகளில் கிவி கனிக்கு உணவியல் குறியீடு எண்ணாக அதிக அளவு சத்துக்கள் நிறைந்த கனி என்பதால், இதற்கு 16 என்ற எண்ணை வழங்கியுள்ளார்கள். இது முதல் இடமாகும். இதற்கு அடுத்தபடியாக உணவுக் குறியீடு உள்ள கனியான பப்பாளிக்கு 14 அளித்துள்ளார்கள். மெலன் என்ற தர்பூசணிக்கு 13 என்ற குறியீடு எண்ணும், ஸ்ட்ரா பெர்ரிக்கு உணவுக் குறியீடு எண் 12, மாம்பழத்துக்கு 12, ஆரஞ்சு வகைகளுக்கு குறியீடு எண் 11 வழங்கியுள்ளனர்.

மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்தக் கிவி பழம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், அடிக்கடி சாப்பிட ஆஸ்துமாவை அடியோடு விரட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com