கருஞ்சீரகப் பொடியின் மகத்துவம்

கருஞ்சீரகப் பொடியை 4 கிராம் எடுத்து நீராகாரத்துடன் 3-லிருந்து 7- நாள் வரை காலையில்
கருஞ்சீரகப் பொடியின் மகத்துவம்

கருஞ்சீரகப் பொடியை 4 கிராம் எடுத்து நீராகாரத்துடன் 3-லிருந்து 7- நாள் வரை காலையில் மற்றும் மாலையிலும் சாப்பிட்டு வர, விஷப்பூச்சிகடியாக இருந்தாலும், வேறு ஏதேனும் நச்சு கடியாக இருந்தாலும் நல்ல குணம் கிடைக்கும். 

கருஞ்சீரகத்தை வெந்நீர் விட்டு அரைத்து தலைவலிக்கும் மூட்டு வீக்கத்துக்கும் மேல்பூச்சாக பூசி வந்தால் சரியாகும்.

இந்தப் பொடியைக் காடி (நீராகாரம்) விட்டு அரைத்து படை இருக்கும் இடத்தில்  பூசலாம். கரப்பான், சிரங்கு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் நல்லெண்ணெயில் கருஞ்சீரகப் பொடியைச் சேர்த்து குழைத்து பூச குணமாகும்.

பசுவின் கோமியம் விட்டு அரைத்து வீக்கம் உள்ள இடத்தில் பூசினால் வீக்கம் குறையும். இந்தப் பொடிய தேன் விட்டு அரைத்துப் பூச, குழந்தை பேறுக்கு பிறகு பெண்களுக்கு ஏற்படும் வலி குணமாகும்.

கருஞ்சீரகப் பொடியை 1 கிராம் எடுத்து தேனுடன் சேர்த்து அல்லது நீர் கலந்து குடுத்தால் மூச்சு முட்டல் பிரச்னை உள்ளவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

கருஞ்சீரகப் பொடியை 1 கிராம் எடுத்து மோருடன் கலந்து தொடர்ந்து குடித்து வந்தாச் விடாமல் வரும் விக்கல் பிரச்னை குணமாகும்.

1 கிராம் பொடிய எடுத்து நீராகாரத்துடன் குடித்து வந்தால் குடலில் உள்ள புழுக்கள் எல்லாம் வெளியேறிவிடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com