உங்கள் உடல் எடை குறைய வேண்டுமா? எளிய தீர்வு இதுதான்!

பொன்னாங்கண்ணி கீரையைப் பற்றிப் பார்க்கலாம். வாரத்தில் குறைந்தது ஒரே ஒரு முறையாவது
உங்கள் உடல் எடை குறைய வேண்டுமா? எளிய தீர்வு இதுதான்!
Published on
Updated on
2 min read

வாரத்தில் குறைந்தது ஒரே ஒரு முறையாவது கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் பல நாம் அன்றாடம் உண்ணும் உணவின் மூலமாகவே கிடைத்துவிடுகின்றன. ஆனால் நாம் சரியான சரிவிகித உணவை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம். எனவே, அனைவருக்கும் சரிவிகித உணவு அவசியமாகிறது.

உடல் எடை குறைய : உடல் எடை குறைய பொண்ணாங்கன்னி கீரை உதவுகிறது. பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

உடல் எடை அதிகரிக்க : பொன்னாங்கண்ணி கீரை உடல் எடையை குறைக்க மட்டுமில்லாமல் கூட்டவும் உதவுகிறது. துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடைக்கூடும் என்பது இந்த கீரையின் தனித்தன்மை. பொன்னாங்கண்ணி கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால், உடல் வலிமை பெரும். எலும்புகள் உறுதியாகும்.

வாய் துர்நாற்றம் : வாயில் இருந்து வரும் துர்நாற்றம் நமது பலவீனமாக அமையும். பொன்னாங்கண்ணி கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் போகும்.

புத்துணர்ச்சி : பொன்னாங்கண்ணி கீரையைத் தினமும் சாப்பிட்டு வந்தால், இதயம் மற்றும் மூளை புத்துணர்வு பெறுகிறது. இதனால் நாம் சுறுசுறுப்பாக செயல்பட முடிகிறது.

நோய்கள் : பொன்னாங்கண்ணி கீரை மூலநோய் மற்றும் மண்ணீரல் நோய்களைப் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

பார்வை திறன் : பொன்னாங்கண்ணி கீரையைத் தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பகலிலும் நிலவை பார்க்கலாம். அந்த அளவுக்கு கண் பார்வை நன்றாக தெரியும்.

ரத்த சுத்திகரிப்பு : பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக நீரில் இட்டு கழுவி, சிறிது சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும்.

சிவந்த கண்கள் : இரவு சரியாக தூக்கமில்லாத காரணத்தாலும், நீண்ட நேரம் செல்போன், கணினி போன்ற எலட்ரானிக் சாதனங்களைப் பார்ப்பதாலும் கண்கள் சிவந்து காணப்படுகிறது. இதனை போக்க பொன்னாங்கண்ணி கீரையைப் பொறியல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்னை நீங்கும்.

பொன்னிறம் : பொன்னாங்கண்ணி கீரை தங்கம் போன்ற சருமத்தை தரும் ஆற்றல் கொண்டது. இந்தக் கீரையைச் சாப்பிட்டால் அழகு மேம்படும்.

இவ்வளவு பயனுள்ள கீரைகளை வீட்டில் வளர்த்தும் பயன்படுத்தலாம் பொன்னாங்கண்ணி கீரையின் தண்டுகளைக் கிள்ளி மண்ணில் ஊன்றி வைத்தாலே கீரை செடி நன்றாக வளர்ந்து விடும். இதனை நீங்கள் வீட்டிலேயே வளர்க்கலாம்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com