
வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரை இரண்டுமே ஆரோக்கியத்துக்கும், பல நோய்களுக்கும் தீர்வாக விளங்குகிறது. முக்கியமாக வயிறு உப்பிசம், வயிற்றுப் போக்கு போன்ற பிரச்னைகளைத் தீர்க்க வெந்தயம் அருமருந்தாகும். வயிற்றில் வலி இருந்தால் சிறிதளவு வெந்தயத்தை மோருடன் அல்லது தண்ணீருடன் சாப்பிட்டால் போதும், உடனடியாக வலி சரியாகும்.
வெந்தயத்திலுள்ள குழகுழப்பும் நெய்ப்பும் குடலின் வேக்காளத்தையும் பரபரப்பையும் குறைக்க உதவும். விதை, வெந்தயக் கீரையைப் போலல்லாமல், மலத்தை இளக்கக உதவக் கூடியது. வலியுடன் சீதமும் ரத்தமும் மலத்துடனோ மலமில்லாமலோ போகும் போது விதையை வறுத்துக் கஷாயமாக்கி தேனுடன் சாப்பிட மிகவும் நல்லது. தினமும் இரவில் தயிரில் வெந்தய விதையை ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிட, வயிற்றுப்போக்கு குணமாகிவிடும்.
வாரம் ஒருமுறை வெந்தய சாதம் தயாரித்து சாப்பிட்டால் பலவிதமான உபாதைகளிலிருந்து விடுபடலாம்.
வெந்தயத்தை இரவு ஊற வைக்கவும். ஊறிய வெந்தயத்தில் கசப்பு இருக்காது. காரத்துக்கு சிறிதளவு தனியா மற்றும் காஞ்ச மிளகாவை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, அது காய்ந்ததும் லேசாக எண்ணெய் விடவும். சூடானதும் கொஞ்சம் கடுகு, கொஞ்சம் சீரகம், கொஞ்சம் கறிவேப்பிலை, நீள வாக்கில் நறுக்கப்பட்ட வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், தக்காளியை அதில் சேர்க்கவும். ஊற வைத்துள்ள வெந்தயத்தை இப்போது சேர்க்கவும். தேவையான அளவு உப்பு போடவும்.
பொடி பண்ணி வைத்துள்ள (கடலைப் பருப்பு உளுத்தம் பருப்பு, தனியா, காஞ்ச மிளகா வறுத்து பொடி செய்தது) சேர்க்கவும். அதன்பின் சாதம் சேர்க்கவும். கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.
இந்த வெந்தய சாதம் சத்து மட்டுமல்ல சுவையாகவும் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.