உணவே மருந்து
ஒரே ஒரு மிளகு போதும் இந்த குளிர்காலத்தை கடந்துவிடலாம்!
இரு மிளகெடுத்து, இரண்டொரு ஆடாதோடா இலை சேர்த்து உண்டு வர இருமல், சளி காணாமல் போகும்.
- ஒரே ஒரு மிளகு போதும்.... சுவைக்காக!
- இரு மிளகெடுத்து, இரண்டொரு ஆடாதோடா இலை சேர்த்து உண்டு வர இருமல், சளி காணாமல் போகும்.
- மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்த்தால் கேசம் அடர்த்தியாக வளரும்.
- நான்கு மிளகும், சுக்கும் சிறிது கலந்தால் நெஞ்சுவலி சொல்லாமல் போகும்.
- ஐந்து மிளகும், சுக்கும், திப்பிலியும் இணைந்தால் கோழை ஓடியே போகும்.
- ஆறு மிளகெடுத்து, பெருஞ்சீரகம் ( சோம்பு) இழைத்து உண்ண, மூல நோய் வந்த சுவடின்றி தானே மறையும்.
- ஏழு மிளகைப் பொடி செய்து, நெய் கலந்து அன்னம் பிசைந்து உண்டால், நல்லபசி எடுக்கும்.
- எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்துக் கொண்டால், வாந்தி கூட எட்டி நிற்கும்.
- ஒன்பது மிளகும், துளசியும், ஒவ்வாமையை துரத்தியடிக்கும்.
- பத்து மிளகை வாயில் போட்டுக் கடித்து மென்று விட்டு, பகைவன் வீட்டிலும் பயமின்றி விருந்து உண்ணலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.