தினமும் எத்தனை முட்டைகளைச் சாப்பிடலாம்?

ஒரு சிலர் உடல்எடையை குறைக்க முட்டை டயட் எடுத்துக் கொள்கிறார்கள். அதென்ன முட்டை டயட்?
தினமும் எத்தனை முட்டைகளைச் சாப்பிடலாம்?
Published on
Updated on
3 min read

ஒரு சிலர் உடல்எடையை குறைக்க முட்டை டயட் எடுத்துக் கொள்கிறார்கள். அதென்ன முட்டை டயட்? அவர்களின் இந்த டயட் ப்ளான் வித்யாசமானதாக இருக்கும். காரணம் பத்து முட்டைகளை தினமும் அவர்கள் சாப்பிடுவார்கள்.

முட்டை ஒரு முழுமையான சத்து நிறைந்த உணவாகும். முட்டையில் அதிக அளவு புரோட்டின், வைட்டமின், மினரல், மற்றும் நல்ல கொழுப்பு ஆகியவைகளைக் கொண்டுள்ளது. கொழுப்பு சத்து இருப்பதால் முட்டையை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று சிலர் நினைக்கக் கூடும். உடல் எடை அதிகரிக்கும் என்றால் டயட் உணவில் எப்படி அதை சேர்க்க முடியும்?அந்த டயட்டை எடுத்துக் கொள்பவர்கள் முட்டையை இணை உணவாக எடுத்துக் கொள்வதில்லை. முழு முட்டைதான் முக்கிய உணவே.

முட்டையில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளது என்பது சந்தேகமேயில்லை. ஆனால் உடலிலுள்ள HDL என்கின்ற நல்ல கொழுப்புதான் அதிகமாகிறது. இது இதயத்தில் சேரும் கெட்ட கொழுப்பான LDL-யை, இதயத்திலிருந்து வெளியேற்றி, கல்லீரலுக்கு அனுப்புகிறது. அங்கே கெட்ட கொழுப்பு முழுவதும் வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுகிறது. இதனால் உடலில் கொழுப்பின் அளவு குறைகிறது. இதய நோய்கள் தடுக்கப்படுகிறது. மேலும் முட்டையில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் என்ற கொழுப்பு அமிலம் உள்ளதால் அது உடலில் HDL அளவை அதிகப்படுத்திகிறது. கொழுப்பு குறைந்து உடலை இளைக்க வைக்க உதவுகிறது. 

இந்த டயட் எல்லாம் நமக்கு எதற்கு என்று நினைப்பவர்கள் ஒரு நாளில் சராசரியாக இரண்டு முட்டைகள் சாப்பிடலாம். சிலர் முட்டையை உடைத்து பச்சையாக அப்படியே சாப்பிடுவார்கள். சிக்ஸ் பேக், எய்ட் பேக் என உடலை ஜிம் பாடியாக மாற்ற முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வேண்டுமானாலும் அது சரியாக வரும், பொதுவாக அனைவரும் வேக வைத்த முட்டையை சாப்பிடுவதே நல்லது. காரணம் அதில் பச்சை முட்டையை விட இரண்டு மடங்கு அதிகமாக சத்து இருக்கிறது.

ஒரு முழு முட்டையில் என்னென்ன ஊட்டச் சத்துக்கள் உள்ளது என்று பார்க்கலாம்.

லியூடின் மற்றும் ஜீ ஜான்தின் என்கின்ற இரு ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும் முட்டையில் உள்ளது. முட்டையில் ஃபோலேட் என்கின்ற மினரல் உள்ளது. மேலும் ஏ, பி12, பி2, பி5, ஆகிய வைட்டமின்களும், செலினியம், ஜிங்க், பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் உள்ளன. இதன் கலோரி அளவு-77, கொழுப்பு - 5 கிராம், புரோட்டின் - 6 கிராம் உள்ளது. கொலைன் என்கின்ற பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் தேவை. அது மட்டுமில்லாமல் உடலின் பல இயக்கங்களுக்கும் கொலைன் தேவைப்படுகிறது. இந்த கொலை முட்டையில் அதிகமாக உள்ளது.

நம்முடைய உடல் செயல்கள் அனைத்துக்கும் மொத்தம் 21 அமினோ அமிலங்கள் தேவை. அவற்றில் 12 அமினோ அமிலங்கள் நம் உடலிலேயே உருவாகக் கூடியவை. மீதம் உள்ள 9 அமினோ அமிலங்கள் நாம் உட்கொள்ளும் உணவிலிருந்துதான் பெற்றுக் கொள்ள வேண்டும். முட்டையில் இந்த எஸென்ஷியல் அமினோ அமிலங்கள் உடலுக்குத் தேவைப்படும் அளவில் உள்ளது என்பது கூடுதல் சிறப்பு.

முட்டையில் உள்ள புரதச்சத்து குழந்தைகளுக்கு நல்லது. தினமும் காலையில் குழந்தைகளுக்கு ஒரு முட்டை கொடுப்பது மிகவும் நல்லது. உடல் நலத்திற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி இதில் உள்ளது. உடல் வளர்ச்சிக்குத் தேவையான எல்லா சத்துக்களும் குறைவின்றி முட்டையில் உள்ளது. எனவே சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களுக்கும் சரி தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் போதும். அதைவிட சிறந்த சத்துணவு வேறு எதுவும் இருக்க முடியாது. அதனால்தான் அரசுப் பள்ளிச் சத்துணவு திட்டத்தில் முட்டையை கட்டாயமாக சேர்த்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com