தொப்பை கரைய வேண்டுமா உடனடியாக இதை செய்யுங்கள்!

ஆளி விதை (ஃப்ளக்ஸ் சீட்ஸ்) உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. 100 கிராம் ஆளிவிதையில் 530 கலோரி சக்தி, 37 கிராம் நல்ல கொழுப்பு, 28 கிராம் நார்ச்சத்து, 20 கிராம் புரதம் உள்ளது.
தொப்பை கரைய வேண்டுமா உடனடியாக இதை செய்யுங்கள்!
Updated on
2 min read

ஆளி விதை (Flax Seeds) உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. ஆளிவிதையா அதென்ன வெளிநாட்டு உணவு வகையா என்று நினைக்க வேண்டாம். நம் நாட்டில் இருக்கும் வெள்ளரி விதை, பூசணி விதை போன்றவற்றைப் போன்ற ஒன்றுதான். 100 கிராம் ஆளிவிதையில் 530 கலோரி சக்தி, 37 கிராம் நல்ல கொழுப்பு, 28 கிராம் நார்ச்சத்து, 20 கிராம் புரதம் உள்ளது. இதை தொடர்ந்து பயன்படுத்துகையில் உடல் எடை குறைவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய், ஆண்களுக்கு ஏற்படக் கூடிய புரோஸ்டேட் கான்சர்,  இதய நோய்கள், உள்ளிட்ட பல பிரச்னைகளை எதிர்த்து செயல்படும் திறன் இந்த ஆளிவிதைக்கு உண்டு.

மேலும் தைராய்ட் பிரச்னை, ஹார்மோன் இம்பாலன்ஸ் போன்ற பிரச்னைகளை தீர்க்கும். இது இதயம் மற்றும் மூளை செயல்திறன்களுக்கு நல்லது. இது முடி உதிர்வை நிறுத்தும். ஆளி விதையை சாப்பிட்டால் தோல் சுருக்கம் இருக்காது. உடல் கட்டுக்கோப்பாக இருக்கும். கண்களுக்கும் இது நல்லது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமல் ஆளிவிதை பாதுகாக்கிறது. நார்ச்சத்து அதிகமிருப்பதால் மலச்சிக்கலை நீக்குகிறது. முக்கியமாக உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை நீக்கி, உடலை ஸ்லிம்மாக வைத்திருக்க உதவுகிறது. தொப்பை இருந்தால் தொடர்ந்து ஆளிவிதை சாப்பிட தொப்பை குறையும்.

ஆளிவிதையில் இரண்டு வகைகள் உள்ளன. அவை மஞ்சள் மற்றும் காவி நிறம் கொண்டவை. காவி. ஆளிவிதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைய உள்ளன. மேலும் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ள ஆளிவிதையில் லிக்னன்ஸ் உள்ளிட்ட நுண் சத்துக்கள் மற்றும் நல்ல கொழுப்பு அமிலம் உள்ளது. இவை உயிராற்றலைச் சுறுசுறுப்பாக்கும் சத்துக்கள் ஆகும்.

ஆளிவிதையை இரவில் ஊறவைத்து காலையில் சுண்டல் போல தாளித்துச் சாப்பிடலாம். அல்லது இதனை பொடியாகத் தயாரித்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த ஆளிவிதைப் பொடியை தயாரிப்பது எப்படி?

  • ஒரு கடாயில் 3 டீஸ்பூன் ஆளி விதையைப் போடவும். மிதமான சூட்டில் லேசாக வறுக்கவும்.
  • பின்பு அதனை ஆற வைத்து மிக்ஸியில் பொடி செய்யவும்.
  • தூளாக்கிய ஆளி விதையுடன் 2 டீஸ்பூன் ஓமம் மற்றும் 2 டீஸ்பூன் சீரகம் சேர்க்கவும் (பச்சையாகவே பயன்படுத்தலாம், வறுக்கத் தேவையில்லை) 
  • பின்பு இந்த மூன்றையும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். ஏற்கனவே அளிவிதையை ஒரு முறை மிக்ஸியில் அரைத்ததால் இரண்டாம் தடவை அரைபடும்போது நன்றாக தூளாகிவிடும்.
  • இந்தப் பொடியை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு தம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில், ஒரு டீஸ்பூன் ஆளிவிதை தூளைக் கலந்து குடிக்கலாம்.

உங்கள் உடம்பில் எந்த பிரச்னை இருந்தாலும், ஒரே வாரத்தில் நல்ல பலன்கள் தெரியத் தொடங்கும்.

ஆளிவிதை தினமும் எடுத்துக் கொண்டால் நிச்சயம் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். ஆளிவிதை ரத்தக்குழாய்களை நன்கு சுத்தம் செய்து அதிலுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றிவிடுகின்றன. நாம் சாப்பிடும் சில உணவுகளில் ஒமேகா-3ம், நார்ச்சத்தும் இருக்கின்றன. ஆனால், லிக்னன்ஸ் கிடையாது. ஆளிவிதையில் மட்டுமே இது உண்டு என்பதால்  உடல்நலத்தை மேம்படுத்தும். ஆளிவிதை எங்கே கிடைக்கும் என்று திகைக்க வேண்டாம். எல்லா சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கும். இது விலை உயர்ந்தது எல்லாம் இல்லை. மலிவாகக் கிடைக்கக் கூடிய எளிய உணவுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com