உலகின் விலையுயர்ந்த காபி

இந்த பூனைக்கும் இந்த காபிக்கும் என்ன தொடர்பு உள்ளது என கேள்விகள் தோன்றலாம்.
உலகின் விலையுயர்ந்த காபி

சாப்ட் ட்ரிங்க்ஸ் ஹாட் ட்ரிங்க்ஸ்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருந்தாலும் காப்பி பிரியர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. காலை, நண்பகல், சாயங்காலம், இரவு என எந்நேரமும் இதற்காக நாவின் சுவை நரம்புகள் அடம் பிடித்துக் கொண்டே இருக்கும். ஒரு குவளை காப்பியில் எத்தனை எத்தனையோ நிகழ்வுகள் அரங்கேறும். நாட்டுகளுக்கு நடுவே உண்டான தீராத பிரச்னையும் கூட ஒரு கப் காப்பியுடன் உட்கார்ந்தால் தீர்ந்துவிடும். இந்த பானத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.

வெயில், குளிர். மழையென எந்த காலத்திலும் இதனின் சுவை திகட்டியதில்லை. பொதுவாக காப்பி ஊக்கமளிக்கும் ஒரு மருந்து எனக் கூறலாம், கஃப்பைன் (caffeine) நம்முடைய மைய நரம்பு மண்டலத்தை ஊக்குவிக்கிறது இதைத்தான் ஆங்கிலத்தில் ஸ்டிமுலென்ட் (stimulant) என்கிறார்கள். இப்படி காபியைப் பற்றி பல விஷயங்கள் இருந்தாலும், புதுவிதமான சுவையை தேடித் தேடி செல்லும் மனிதனின் மூளையை என்ன சொல்ல?

உலகில் மிகவும் விலையுயர்ந்த காபியானது இந்தோனேஷியத் தீவான சுமத்ராவில் விற்கப்பட்டது, இப்போது இது இந்தியாவிற்கும் வந்திருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ஒரு கிலோவிற்கு ரூபாய் எட்டாயிரமாகவும் (இன்றைய விலை நிலவரப்படி) ஐரோப்பிய நாடுகளில் ருபாய் இருபதிலிருந்து  இருபத்தி ஐயாயிரத்திற்கும் விற்கப்படுகிறதாம். இதைக் கேள்விப்பட்டதும் ‘என்னடா இது, பல வருடகாலமா காபியை காலணா, எட்டணா, மிஞ்சி மிஞ்சிப் போனா ஐம்பது ரூபாய்க்கு குடிச்சிருக்கோம் இது என்ன ஆயிரக்கணக்குல?’ இந்தக் கேள்வியின் விடையைக் கேட்டதும் விரிந்த பலரின் கண்கள் சுருங்கக்கூடும். இந்த விலை உயர்ந்த காபியின் சிறப்பம்சத்தைக் காண்போம்.

புனுகுப் பூனை அழிந்து வரும் உயிரினங்களுள் ஒன்று. இப்பூனை நம் நாட்டுக் காடுகளில் பரவலாக காணப்பட்டாலும், ஆப்பிரிக்க புனுகு பூனைகளே பிரபலமானவை. இந்த பூனையில் மொத்தம் பன்னிரண்டு வகைகள் உண்டு என்று விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். புனுகுப்பூனையில் வால் பகுதியில் இரண்டு திரவங்கள் சுரக்கப்படுகின்றன, அதில் ஒரு திரவத்தையே புனுகு என்கிறோம். இதை வாசனைத் திரவமாகவும் பயன்படுத்துவார்கள். இப்போதும் பல கிராமங்களில் மலைவாழ் மக்கள் இதை விற்று வருகிறார்கள். இந்த திரவம் பூனையின் இனப்பெருக்கதிற்கு பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பல மருத்துவ குணமும் நிறைந்தது.

சரி, இந்த பூனைக்கும் இந்த காபிக்கும் என்ன தொடர்பு உள்ளது என கேள்விகள் தோன்றலாம். இந்த பூனைகளுக்கு காப்பி பழங்களை சாப்பிடக் கொடுத்து, அதை அது செறித்தும் செரிக்காமலும் அதனின் கழிவுகளில் வெளியேற்றும். அப்படி வெளியேற்றப்பட்ட கழிவுகளிலுள்ள காப்பி கொட்டைகளை எடுத்து சுத்தம் செய்து, அந்த பொடியில் காப்பி போட்டு குடித்தால் சுவையும், மணமும் நம்மை எங்கோ கொண்டு நிறுத்திவிடுமாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com