சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளைச் சீராக்கும் கீரைச் சாறு
By கோவை பாலா | Published On : 23rd December 2019 08:47 AM | Last Updated : 23rd December 2019 08:47 AM | அ+அ அ- |

கீரை : பருப்புக் கீரை சூப்
தேவையான பொருட்கள்
பருப்புக் கீரை - 2 கட்டு
மிளகு, சீரகம் - ஒரு ஸ்பூன்
பூண்டு - 10 பல்
இஞ்சி - ஒரு துண்டு
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
மல்லி , புதினா இலை - ஒரு கைப்பிடி அளவு
உப்பு , மஞ்சள் , எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
- கீரையை சுத்தம் செய்யவும்.
- மஞ்சள், சீரகம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து கீரையுடன் அரைத்து சாற்றை வடிகட்டிக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி அதனுடன் வடிகட்டி வைத்துள்ள கீரைச் சாற்றையும் சேர்த்து தேவைக்கு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து பின்பு கொத்தமல்லித் தழை, புதினா சேர்த்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.
பலன்கள்
சிறுநீரக குறைபாடு உள்ளவர்கள் தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இந்த பருப்புக் கீரை சூப்பை குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உண்டாகும் சிக்கல்கள் அனைத்தும் சீராகும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com