உங்கள் வீட்டு கொலுவில் சுவையும் சத்தும் நிறைந்த சுண்டல் தயாரிக்க சில டிப்ஸ்

பட்டாணி சுண்டலை வேக வைத்து இறக்கும்போது கடுகு, கறிவேப்பிலையுடன் சிறிது மிளகுப் பொடி தூவி இறக்கினால் வித்தியாசமான சுவையாக இருக்கும்.
உங்கள் வீட்டு கொலுவில் சுவையும் சத்தும் நிறைந்த சுண்டல் தயாரிக்க சில டிப்ஸ்
  • பட்டாணி சுண்டலை வேக வைத்து இறக்கும்போது கடுகு, கறிவேப்பிலையுடன் சிறிது மிளகுப் பொடி தூவி இறக்கினால் வித்தியாசமான சுவையாக இருக்கும்.
  • சுண்டலுக்கு பட்டாணி வேக வைக்கும் போது அதிகம் வெந்துவிட்டால், பட்டாணி மேல் ஐஸ்வாட்டரை ஊற்றி ஐந்து நிமிடம் கழித்து எடுத்தால் சுண்டல் பக்குவமாக மாறியிருக்கும். பின்பு சுண்டல் தயார் செய்து பரிமாறலாம்.
  • எந்தவகை சுண்டலாக இருந்தாலும் தாளிதம் செய்து இறக்கிய பின் இரண்டு தேக்கரண்டி அவலை வறுத்துப் பொடித்துத் தூவினால் சுண்டல் சூப்பராக இருக்கும்.
  • உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை இவைகளை பொன்னிறமாக வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டால், எந்த சுண்டல் செய்தாலும், அதில் 1 தேக்கரண்டி தூவி இறக்கினால் சுண்டல் சுவை பிரமாதமாக இருக்கும்.
  • பயறு சுண்டல் செய்ய எட்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்துவிட்டு ஹாட் பாக்ஸில் போட்டு மூடி வைத்துவிட்டு மறுநாள் திறந்து பார்த்தால் முளைக் கட்டிய பயறு தயார் ஆகிவிடும். பின்னர் சுண்டல் செய்தால் சத்தான சுண்டலாக இருக்கும். 
  • சாட் மசாலா பொடி வாங்கி வைத்துக் கொண்டு, எந்த வகை சுண்டல் செய்தாலும் இறுதியில் 1 தேக்கரண்டி சாட் மசாலா தூவி இறக்கினால் சுவை அபாரமாக இருக்கும். 
  • கொலுவில் மலைகளுக்கு விளக்குகள் அமைக்கும் போது மலைப்பாதையில் சிறிய கலர் மெழுகுவர்த்திகளை சுற்றி நிறுத்தினால் மலையைப் பார்க்க அழகாக இருக்கும்.
  • பூ ஜாடியில் எப்போதும் பூக்களை வைத்தே அலங்கரிப்பதை விட மாறுதலுக்காக நெற்கதிர், சோளக்கதிர் போன்றவற்றை கதிரோடு வாங்கி வந்து வைக்கலாம். வித்தியாசமாகவும், அழகாகவும் இருக்கும்.
  • பேப்பர் பிளேட்டின் நடுவே சிறிய ஓட்டைப் போட்டு அதில் பேனாவை சொருகி பார்க்கில் ஆங்காங்கே நிற்க வைத்தால் நிழற்குடை அமைத்தது போன்று அழகாக இருக்கும். 

-ஆர். ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com