தீராத வெள்ளைப்படுதல் குறைபாடுகளை நீக்க உதவும் உன்னதமான கஞ்சி
By கோவை பாலா | Published On : 02nd September 2019 11:42 AM | Last Updated : 02nd September 2019 11:42 AM | அ+அ அ- |

தண்ணீர்விட்டான் கிழங்குக் கஞ்சி
தேவையான பொருட்கள்
தண்ணீர்விட்டான் கிழங்கு - 30 கிராம்
புழுங்கலரிசி நொய் - 50 கிராம்
பால் - கால் லிட்டர்
தண்ணீர் - கால் லிட்டர்
நாட்டுச் சர்க்கரை - 50 கிராம்
செய்முறை : முதலில் தண்ணீர்விட்டான் கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் கிழங்குத் துண்டுகளை போட்டு வேக வைக்கவும். கிழங்கு துண்டுகள் வெந்தவுடன் அதில் புழுங்கலரிசி நொய்யை போட்டு நன்கு வேக வைக்கவும். இரண்டும் நன்கு வெந்த நிலையில் அதனுடன் நாட்டுச் சர்க்கரையை தூளாக்கி கலந்து நன்கு கரைந்தவுடன் பால் சேர்த்து அனைத்தையும் நன்கு கலந்து வைத்துக் கொண்டு சாப்பிடலாம்.
பயன்கள் : இந்தக் தண்ணீர்விட்டான் கிழங்கு கஞ்சியை சிறுநீரகத்தில் நீரடைப்பு, கல்லடைப்பு, ஆசனவாயில் கடுகடுப்பு மற்றும் பலவருடங்களாக உள்ள தீராத வெள்ளைப்படுதல் குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால் குறைபாடுகள் அனைத்தையும் தீர்க்கும்.
இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...