உடலுக்கு பலத்தைக் கொடுக்கும் அமிர்தமான உணவு இது!
By கோவை பாலா | Published On : 03rd September 2019 10:54 AM | Last Updated : 03rd September 2019 10:54 AM | அ+அ அ- |

முருங்கைக்காய் கஞ்சி
தேவையான பொருட்கள்
முருங்கைக்காய் - 4
பயிற்றம் பருப்பு - ஒரு கைப்பிடி
பூண்டுப் பல் - 2
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் முருங்கைக்காயை விரலளவு நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய காயை நீராவியில் வேக வைத்து அதனை பிளந்து உள்ளே உள்ள சதையை வழித்தெடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பயிற்றம் பருப்பு மற்றும் பூண்டுப் பல் சேர்த்து வேக வைக்கவும்.
நன்கு வெந்தப் பின்பு அவற்றில் வழித்தெடுத்து வைத்துள்ள முருங்கைச் சதையை சேர்த்துக் காய்ச்சி இறக்கி அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து குடிக்கவும்.
பயன்கள்
இந்த அற்புதமான முருங்கைக்காய் கஞ்சியை தினமும் காலை அல்லது மாலை வேளையில் குடித்து வந்தால் உடலுக்கு நல்ல பலத்தை கொடுத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala