சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு அற்புதமான கீரை
By | Published On : 03rd May 2022 04:26 PM | Last Updated : 03rd May 2022 04:26 PM | அ+அ அ- |

தேவையான பொருட்கள்
பாலக் கீரை - ஒரு கட்டு
கோவக்காய் - 10
தக்காளி - 2
சின்ன வெங்காயம். - 50 கிராம்
சீரகம். - ஒரு ஸ்பூன்
மிளகுத் தூள். - தேவையான அளவு
நெய். - சிறிதளவு
செய்முறை
முதலில் தேவையான அளவு பாலக் கீரையை எடுத்து சுத்தப்படுத்தி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கோவக்காயை சுத்தப்படுத்தி நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
இட்லி பாத்திரத்தில் மேல் தட்டில் பொடியாக நறுக்கிய பாலக் கீரை , கோவக்காய் , நறுக்கிய தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை வைத்து நீராவியில் வேக வைக்கவும்.
ஒரு வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி அதில் நீராவியில் வேக வைத்த பாலக் கீரை, கோவக்காய், தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் மற்றும் மிளகுத் தூள், சீரகம் சேர்த்து நன்றாக கிளறி உணவாக எடுத்துக் கொள்ளவும்.
தீரும் குறைபாடுகள்
நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை நிலையாக வைத்துக்கொள்ள உதவக் கூடிய அற்புதமான உணவு
சாப்பிடும் முறை
மேற்கூறிய குறைபாடு உள்ளவர்கள் மேற்கூறிய முறையில் பாலக் கீரையை வேகவைத்து ஒரு வேளை உணவாக உட்கொண்டு வந்தால் சர்க்கரையின் அளை நிலையாக வைத்துக் கொள்ளலாம்.
இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.
-கோவை பாலா
இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell : 96557 58609 , 75503 24609
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...