மல்டி டாஸ்கிங் ஆபத்துக்கள்!

பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்வதால் மன அழுத்தம் ஏற்படும் என்கிறது
மல்டி டாஸ்கிங் ஆபத்துக்கள்!

பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்வதால் மன அழுத்தம் ஏற்படும் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சியொன்று. நீங்கள் ஷாப்பிங் செல்ல முடிவெடுத்தீர்கள் என்றால் அதை மட்டும் செய்வது நல்லது. ஒன்றுக்கும் மேற்பட்ட வேலையை ஒரே சமயத்தில் செய்யும் போது ஒன்றில் கவனம் பிசகி மற்றொரு வேலையில் கோட்டை விடுவதால் பாதிக்கப்படுவீர்கள் என்கிறார்கள் என்கிறது இந்த ஆராய்ச்சி.

ஏஞ்சல் என்பவர் ஷாப்பிங் சென்ற போது செல்ஃபோனில் பேசிக் கொண்டே பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்கினார். ஆனால் அவர் திரும்பி வீடு வந்து சேர்ந்த போது தான் நிறைய பொருட்களை வாங்காமல் திரும்பி வந்ததும், தேவையற்ற சில பொருட்களை வாங்கிவிட்டதையும் உணர்ந்தார். தன் மீதே எரிச்சலும் கோபமும் அவருக்கு ஏற்பட்டது. இதே போலத் தான் ஹெட்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த க்ளோரி பின்னால் வரும் வண்டியின் ஹார்ன் சத்தம் கேட்காமல் போகவே, விபத்தில் சிக்கி உயிர் இழந்தார்.

இது போன்ற சிலர் இரண்டு மூன்று அல்லது நான்கு வேலைகளை கூட ஒரே சமயத்தில் செய்வார்கள். ஆனால் ஒருசிலரால் மட்டும் தான் அத்தனை வேலைகளையும் திறம்பட செய்ய முடியும். மற்றவர்களால் செய்ய இயலாது. ஆனால் அவர்கள் செய்ய முயலும் போது மன அழுத்தம் ஏற்பட்டு வேலையிலும் கவனம் இருக்காது என்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த ஆராய்ச்சிக்காக பங்கேற்பாளர்களை இரு பிரிவுகளாக்கினார்கள். முதல் பிரிவு பங்கேற்பாளர்கள் கலோரி குறைவான உணவுப் பொருட்கள் வாங்க வேண்டும். அவர்கள் கையில் பணமும் குறைவாக இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ள வேண்டும். அவர்கள் மூன்று வெவ்வேறு உணவுப் பொருட்களை வாங்க வேண்டும் எனவும் பயணத்தில் இருக்கும் நபர்களுக்காக வாங்க வேண்டியிருப்பதால் 500க்கும் குறைவான கலோரி உணவுப் பொருட்கள் மட்டுமே வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர். அவர்கள் ஷாப்பிங் செய்யும் போது அவர்களுக்கு வாய்ஸ்மெயிலில் அவர்கள் நண்பர்கள் பேசியதை அனுப்பினார்கள். அதைக் கேட்டுக் கொண்டே அவர்கள் ஷாப்பிங்கை ஒருவழியாக முடித்தனர்.

ஆராய்ச்சியாள்கர்கள் முக்கியமாக கண்டறிய முனைந்தது பங்கேற்பாளர்கள் இது போன்ற சமயங்களில் ‘ஏன்’ என்ற மனநிலையில் இருப்பார்களா அல்லது ‘எப்படி’ என்ற மனநிலையில் இருப்பார்களா என்று தான். எப்படி என்ற மனநிலையில் இருந்த பங்கேற்பாளர்களால் மல்டி டாஸ்கிங் செய்ய முடிந்தது. ஆனால் ஏன் மனநிலையில் இருந்த பங்கேற்பாளர்கள் தங்களுடைய ஷாப்பிங்கில் அதிகம் சொதப்பியிருந்தனர். குறைவான கலோரிகள் வாங்க மறந்துவிட்டனர் அவர்கள். இதிலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட வேலையை செய்ய முற்படும் போது கவனச் சிதைவு ஏற்படுவதால் மன அழுத்தமும் ஏற்பட்டு செய்ய வந்த வேலையை சரிவர முடிக்க முடியாமல் போகும் என்பது தெளிவாகிவிட்டது என்றார் பேராசிரியர் செலின் அடாலே. இவர் ஜெர்மனியில் உள்ள ஃப்ரான்க்ஃப்ர்ட் நிதி மற்றும் நிர்வாகப் பள்ளியின் பேராசிரியர் ஆவார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com