

உடலை பேணி காப்பதில் இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தெரிவித்தார். பெங்களூரில் விளையாட்டு வீரர்களுக்கான ஆயத்த ஆடைகளை விற்பனை செய்யும் செவன் விற்பனை மையத்தை அண்மையில் திறந்து வைத்த போது அவர் பேசியது: 'பெங்களூரில் அதிக நாள்கள் தங்கி, கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன். அழகான நகரமான பெங்களூரு மீது அன்பு வைத்துள்ள ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
விளையாட்டில் ஈடுபாடுள்ள இளைஞர்கள் உடல் நலத்தை பேணி காப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். கிரிக்கெட், கால்பந்தாட்டத்தில் வாய்ப்புகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். வாய்ப்புகள் வரும்போது உடல் உறுதியாக இருந்தால் மட்டுமே தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டில் வெற்றி பெற முடியும். விளையாட்டில் வெற்றி பெற்றால், எந்த வயதிலும் புகழின் உச்சத்தை அடைய முடியும். எனவே உடலை ஆரோக்கியமாக வைத்து விளையாட்டு மட்டுமின்றி, உடற்பயிற்சியும் அவசியம்’ என்றார் அவர். பேட்டியின்போது ரித்தி குழுமத்தின் மூத்த மேலாண் இயக்குனர் அருண் பாண்டே உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.