வருண முத்ரா
நமது உடல் பஞ்ச பூத சக்தியால் ஆனது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த ஐந்து சக்திகளில் ஏதேனும் ஒரு சக்தியில் குறைபாடு ஏற்பட்டாலும் நோய் எதிர்ப்பு தன்மை குறைந்து வியாதிகள் தோன்றுகிறது.
முத்ரா பயிற்சியானது மின்காந்த அலைகளை உடலில் ஏற்படுத்தி உடலில் சில மாற்றங்களை விளைவிக்கிறது. முத்ரா பயிற்சியை எந்த நேரத்திலும் செய்யலாம். இரத்த சோகை உள்ளவர்கள் இந்த முத்ரா பயிற்சியை செய்யலாம்.
சிறுவர் முதல் பெரியோர் வரை இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் பலர். இதிலும் அதிகமான பெண்கள் சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வு கூறுகிறது. அதற்கு காரணம் ஊட்டச்சத்து குறைபாடே ஆகும். இந்த சோகை நோயை விரட்ட சத்துள்ள ஆகாரங்களை எடுத்து கொள்வதோடு, சில எளிய முத்ரா பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் இதை சரிசெய்யலாம். சோகை பிரச்னை உள்ளவர்கள் வருண முத்ரா பயிற்சியை செய்யலாம்.
வருண முத்ரா செய்யும் முறை;
முதலில் பத்மாசன முறையில் அமர்ந்து கொள்ளுங்கள். பின்பு கைகளில் உள்ள விரல்களில் சுண்டு விரலை மடக்கிக் கொள்ளுங்கள் கட்டை விரலின் முனையை சுண்டு விரலின் முனையோடு இணையுங்கள், மற்ற மூன்று விரல்களும் நேராக நிமிர்த்தி வையுங்கள். இந்த பயிற்சி தினமும் 15 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை செய்யலாம்.
பயன்கள்:
தோல் சம்பந்தமான நோய்கள், இரத்த சோகை, இரத்தக் கோளாறு, கண்கள் வறட்சி, செரிமான பிரச்னை, மாதவிடாய் பிரச்னை போன்ற குறைபாடுகளுக்கு இந்த முத்ரா பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.
சிலருக்கு வாய், தொண்டை அடிக்கடி வரண்டு போகும் இவர்கள் தொடர்ந்து இந்த முத்ராவை செய்வதன் மூலம் இந்த பிரச்னையை சரிசெய்யலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

