மனஅழுத்தம் ஏற்படுத்தும் டி.என்.ஏ எதிர்வினைகளை தலைகீழாக மாற்றுகிறது யோகா

தினமும் தியானம், யோகா மற்றும் டாய்-சி (Tai Chi) போன்ற மனம்-உடல் சார்ந்த பழக்கங்கள் உங்களை நிதானப்படுத்தும்
யோகா
யோகா
Published on
Updated on
1 min read

தினமும் தியானம், யோகா மற்றும் டாய்-சி (Tai Chi) போன்ற மனம்-உடல் சார்ந்த பழக்கங்கள் உங்களை நிதானப்படுத்துவது மட்டுமல்லாமல், மன அழுத்தத்தை உண்டாக்கும் டி.என்.ஏ மூலக்கூறு எதிர்வினைகளை மாற்றி அமைக்கும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

இங்கிலாந்தின் கோவென்ட்ரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பின்படி, தியானம் மற்றும் யோகா செய்வதால் மனம்-உடல் சார்ந்த மரபணு  nuclear factor kappa B (NF-kB) என்ற மூலக்கூறின் உற்பத்தியில் குறைவைக் காட்டுகின்றன.

ஒரு நபர் ஒரு மன அழுத்தத்துக்கு ஆளாகும்போது, ​​அவர்களின் அனுதாப நரம்பு மண்டலம் (எஸ்.என்.எஸ்) - 'சண்டை அல்லது சமாதானம்’ தூண்டப்படுகிறது. இந்த எஸ்என்எஸ் செயல்பாடு என்எஃப்-கேபி உற்பத்திக்கு வழிவகுக்கிறது, இது செல்லுலார் அழற்சியை ஏற்படுத்தும் சைட்டோகைன்கள் எனப்படும் மூலக்கூறுகளை உருவாக்குகிறது. இந்த எதிர்வினை ஒரு மனஅழுத்த சூழ்நிலையை கையாள்வதற்கு உதவியாக இருக்கும், ஆனால் அது தொடர்ந்து இருந்தால் அது புற்றுநோய், விரைவான வயோதிகம் மற்றும் மனச்சோர்வு போன்ற மனநல கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.

தியானம், யோகா மற்றும் டாய் சி ஆகியவை என்.எஃப்-கே.பி மற்றும் சைட்டோகைன்களின் உற்பத்தியைக் குறைக்கும், இது அழற்சிக்கு சார்பான மரபணு வெளிப்பாடு முறையை மாற்றியமைக்கவும், மனநோய்கள் மற்றும் அவற்றின் அபாயத்தைக் குறைக்கவும் வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

'உலகெங்கிலும் உள்ள பல்லாயிரகணக்கான மக்கள் ஏற்கனவே யோகா அல்லது தியானம் போன்ற மனம்-உடல் சார்ந்த ஆரோக்கிய பலன்களை அனுபவித்து வருகின்றனர், நம் உடலின் அனைத்து பாதிப்புகளுக்கும் யோகா தீர்வளிக்கிறது. அவற்றில் மன அழுத்தம் மற்றும் கோபத்தை குறைப்பதில் யோகா சிறந்த பலன்களைத் தருகிறது

ஃபிரான்டியர்ஸ் இன் இம்யூனாலஜி இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுக்கு, குழு 18 ஆய்வுகளை செய்து முடித்தது.  11 ஆண்டுகள் தொடர்ந்த இந்த ஆய்வில் 846 பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com