உடல் துர்நாற்றமா?

வெயில்காலம் மழைக்காமல் என்றில்லை எல்லா காலத்திலும் சிலருக்கு உடல் துர்நாற்றப் பிரச்னை
உடல் துர்நாற்றமா?
Published on
Updated on
2 min read

வெயில்காலம் மழைக்காமல் என்றில்லை எல்லா காலத்திலும் சிலருக்கு உடல் துர்நாற்றப் பிரச்னை...அதனால் மன‌ அவஸ்தை. உடல் துர்நாற்றம் சிறிய பிரச்னை என்று ஒதுக்கிவிடக்கூடாது, அதைத் தவிர்ப்பதற்கான வழிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உடல் துர்நாற்றத்தை Broom Hydrosis   என்று சொல்வார்கள். உடல் துர்நாற்றம் இரண்டு காரணங்களால் ஒருவருக்கு ஏற்படுகிறது.

1. வியர்வை (நம் உடலில் சுரக்கும் வியர்வையில் புரதம் உண்டு. அத்துடன் பாக்டீரியா சேரும்போது அந்தப் புரதங்கள் உடைக்கப்பட்டு  அவை அமிலமாகிறது) 

2. உணவுப் பொருட்கள் (உதாரணமாக பூண்டு, வெங்காயம், அசைவ உணவுகள் மற்றும் மசாலா வகை உணவுகள் சாப்பிட்டால் அந்த வாடை வியர்வையுடன் கலந்துவிடும்)

சருமத்தின்  அடியில் ‘எக்ரைன்’ எனும் வியர்வைச் சுரப்பி இருக்கிறது. இந்த சுரப்பிகள்  தூண்டப்படும் போது உடலில் இருந்து வியர்வை வெளியேறும். உடல் எக்ஸ்போஸ் ஆகும் இடங்களான முகம் கைகளில் வியர்க்கும் போது எவ்வித வாடையும் வராது. ஆனால் அப்போக்ரைன் எனும் சுரப்பி அக்குள் மற்றும் மறைமுக இடங்களில் சுரந்து அவ்விடங்களில் வியர்க்கும் போது துர் நாற்றத்தை ஏற்படும். 

வெளியிலிருந்து பாதிப்பு ஏற்படுத்தும் கிருமிகள் உள் நுழைவதைத் தடுக்க சில நுண்ணுயிர்கள் நம் உடலில் இயற்கையாகவே இருக்கும். இந்த பாதுகாப்பையும் மீறி சில கிருமிகள்  வியர்வையுடன் சேர்ந்து, தோலின் மேல்புறத்தில் ஃபங்கஸை உருவாக்கும். (உதாரணத்துக்கு தயிரை அல்லது ஊறுகாயை ப்ரிட்ஜில் வைக்காமல் வெளியே நான்கைந்து நாட்கள் வைத்துவிடுகையில் அதன் மேல் மஞ்சளாகப் படர்ந்திருக்கும் கிருமி தான் ஃபங்கஸ்.) இந்த ஃபங்கஸ், பாக்டீரியா, தோல் வியர்வை மற்றும் அழுக்கு, புரதம் போன்றவை எல்லாம் சேர்ந்து சருமத்தில் விரும்பத்தகாத துர்நாற்றத்தை உருவாக்கிவிடும். இது பரம்பரையாக சிலருக்கு வருகிறது என்று சொல்லப்பட்டாலும் அப்படி இல்லை. யாருக்கு வேண்டுமானாலும் இந்தப் பிரச்னை வரலாம். வந்துவிட்டால் அதைக் குணப்படுத்த முடியாது, கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.

1. உடல் துர்நாற்றப் பிரச்னை இருப்பவர்கள் தினமும் இரண்டு அல்லது மூன்று முறை கட்டாயம் குளிக்க வேண்டும்.

2. முடிந்தவரையில் சுடு தண்ணீர்க் குளியல் நல்லது.

3. தினமும் காலை மற்றும் மாலையில் குளித்தபின் அக்குள் மற்றும் மறைவுப் பகுதிகளில் ஆன்டி ஃபங்கஸ் பவுடர் தடவ வேண்டும். சர்ஃபாஸ் ((Surfaz) என்ற இந்தப் பவுடர் கடைகளில் கிடைக்கும். இரவில் தூங்கப் போகும் முன்னரும் இதைத் பூசிக் கொள்ளவேண்டும். 

4. அதிக உடல் துர்நாற்றம் கொண்டவர்கள் தினமும் Mupirocin Ointment    அக்குள் மற்றும் மறைவிடங்களில் தடவிய பின் பவுடரும் போட வேண்டும், ஓரளவு பலன் கிடைக்கும். இந்தப் பிரச்னை வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்பதால் தொடர்ந்து இந்த மருந்து மற்றும் பவுடரை பயன்படுத்த 90 சதவிகிதன் தீர்வு கிடைக்கும். கொஞ்ச நாளில் சரியாகிவிட்டது என்று நினைத்து பவுடர் போடுவதைத் தவிர்த்தால், அடுத்த சில நாட்களில் மீண்டும் வாடை அடிக்கத் தொடங்கிவிடும்.

5. சுத்தமாக துவைக்கப்பட்ட ஆடைகளையே அணிய வேண்டும். வெயில் காலத்தில் காட்டன் உடைகள் அணிவது நல்லது. அதிகப்படியான வியர்வையை உறிஞ்சிவிடும். இந்தப் பிரச்னை உடையவர்கள் வசதி மற்றும் வாய்ப்பு இருந்தால் ஒரு நாளில் இரண்டு தடவை உடை மாற்றிக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com