நெருங்கும் கரோனா மூன்றாம் அலை: இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை

கரோனா மூன்றாம் அலை நெருங்கிவருவதாக இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நெருங்கும் கரோனா மூன்றாம் அலை: இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை


கரோனா மூன்றாம் அலை நெருங்கி வருவதாக இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதாரம், மருத்துவக் கட்டமைப்பு உள்ளிட்டவை ஸ்தம்பித்துள்ள நிலையில், கரோனா மூன்றாம் அலை நெருங்கி வருவதாக இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவரும் நிலையில், கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

இந்த நிலையில் கரோனா மூன்றாம் நிலை குறித்து இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட அறிக்கையில், "நாட்டின் பல்வேறு பகுதிகளில் சம்பந்தப்பட்ட துறைகளும் மக்களும் கவனக்குறைவாக இருப்பதை பார்த்தால் மனவலி ஏற்படுகிறது. பெருந்தொற்றின் வரலாறுகள் மற்றும் உலகளவில் உள்ள ஆதாரங்களை கருத்தில் கொண்டால் மூன்றாம் அலை என்பது தவிர்க்க முடியாதது.

இருப்பினும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசும் மக்களும் கரோனா வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் பெரும் கூட்டத்தை கூட்டுகின்றனர்.

சுற்றுலா, ஆன்மிக பயணம், மத உணர்வுகள் ஆகியவை தேவைதான். ஆனால், இன்னும், சில மாதங்களுக்கு பொறுமையாக இருக்க வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்தாமல் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பது கரோனா மூன்றாம் அலை பரவுவதற்கு காரணமாகிவிடும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com