பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அசாம் முஸ்லிம்கள் பாஜகவை ஆதரிப்பார்கள்: நஜ்மா ஹெப்துல்லா

குவாஹாட்டி, ஜன.8: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம்களும் பாரதிய ஜனதா கட்சிக்கு சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என்று மாநிலங்களவை முன்னாள் துணைத் தலைவரும் கட்சியின் தேசிய துணைத் தலைவரும

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

குவாஹாட்டி, ஜன.8: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம்களும் பாரதிய ஜனதா கட்சிக்கு சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என்று மாநிலங்களவை முன்னாள் துணைத் தலைவரும் கட்சியின் தேசிய துணைத் தலைவருமான நஜ்மா ஹெப்துல்லா நம்பிக்கை தெரிவித்தார்.

 அசாமில் நடைபெறும் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில் இக்கருத்தைத் தெரிவித்தார்.

 "நாட்டு மக்கள் ஜாதி, மத அடிப்படையில் வாக்களிப்பதில்லை. இந்தக் கட்சி அல்லது கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நன்மைகள் நடக்குமா, ஊழல்கள் குறையுமா என்று பார்த்துத்தான் வாக்களிக்கிறார்கள்.

 நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை அசாம் முஸ்லிம்களை வாக்கு வங்கியாகத்தான் காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக்கொண்டிருக்கிறதே தவிர கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றில் அவர்கள் தங்களுக்குரிய பங்கைப்பெற எதையும் செய்யவில்லை.

 பிகார் மாநிலத்தில் சமீபத்தில் நடந்துமுடிந்த பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு முஸ்லிம்கள் கணிசமாக ஆதரவு தந்தனர். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகள் பலவற்றில் பாஜக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

 மின்சார சப்ளை, நல்ல சாலை வசதி,போக்குவரத்து வசதி, கல்வி, சுகாதாரம், சட்டம் - ஒழுங்கில் பாதுகாப்பு ஆகியவற்றை பாரதிய ஜனதா கட்சி மேம்படுத்தும் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் முஸ்லிம்களும் வாக்களிக்கத் தவற மாட்டார்கள்.

 நல்ல சாலைகளைப் போட்டால் அது ஹிந்து, முஸ்லிம் என்று எல்லோருக்கும்தான் பயன்படப் போகிறது. எனவே இதை நன்கு புரிந்து வைத்துள்ள முஸ்லிம்கள் எங்களை ஆதரிப்பார்கள்.

 வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக இங்கு குடியேறியுள்ள முஸ்லிம்கள் வெளியேறிவிட வேண்டும். அசாம் மக்களுக்கான மாநில நிதி ஒதுக்கீட்டை அவர்களும் பங்கு போட்டுக்கொள்வது முறையல்ல. வங்கதேச முஸ்லிம்கள் நம்மைப் பொருத்தவரை அன்னியர்களே. அவர்கள் தங்களுடைய நாட்டுக்குத் திரும்பி அந்த நாட்டு அரசைத் தங்களுக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகளைச் செய்துதருமாறு கோரி நெருக்குதல் தர வேண்டும். இந்த நிலையிலிருந்து நாங்கள் என்றைக்கும் மாறமாட்டோம்' என்றார் நஜ்மா ஹெப்துல்லா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.