கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இலங்கை வீரர்களுக்கு பயிற்சி: பிரதமர் நாடு திரும்பியதும் நடவடிக்கை

புது தில்லி, ஆக. 29: நீலகிரியில் பயிற்சி பெறும் இலங்கை ராணுவ வீரர்களைத் திருப்பி அனுப்புவது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் நாடு திரும்பியதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் அலுவலக இணையமைச்சர் வ

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:07 am

அ. சர்ஃப்ராஸ்

புது தில்லி, ஆக. 29: நீலகிரியில் பயிற்சி பெறும் இலங்கை ராணுவ வீரர்களைத் திருப்பி அனுப்புவது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் நாடு திரும்பியதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் அலுவலக இணையமைச்சர் வே. நாராயணசாமி (படம்) தெரிவித்தார்.

தமிழகத்தில் பயிற்சி பெறும் இலங்கை ராணுவ வீரர்களைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், எஸ்.எஸ். ராமசுப்பு, கே.எஸ். அழகிரி ஆகியோர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனியைச் சந்தித்து வலியுறுத்தினர்.

இதையடுத்து, அப் பிரச்னை தொடர்பாக "தினமணி' நிருபரிடம் நாராயணசாமி கூறியது: ஏற்கனவே தாம்பரத்தில் இலங்கை விமானப்படை வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு, தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்னர் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

தற்போது தமிழகத்தில் இலங்கை ராணுவ படை வீரர்கள் 2 பேருக்குப் பயிற்சி அளிக்கப்படுவது தமிழக மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. அவர்களைத் திரும்ப அனுப்ப வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சி உள்பட பிற கட்சியினரும் இதே கோரிக்கையை வைத்துள்ளனர். ஆகையால், இலங்கை ராணுவ வீரர்களைத் திரும்ப அனுப்ப வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனியிடம் வலியுறுத்தினோம். இதைக் கேட்ட அவர், "விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எங்களிடம் உறுதியளித்தார்.

அரசுமுறைப் பயணமாக ஈரான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் நாடு திரும்பியதும், இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் வலியுறுத்துவார்கள். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பார். இந்த விவகாரத்துக்கு ஓரிரு தினங்களில் தீர்வு காணப்படும்

என்றார் நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.