இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

சூரிய நெல்லி வழக்கில் குரியனுக்கு தொடர்பு: நீதிமன்றம் உத்தரவு

சூரியநெல்லி பாலியல் பலாத்கார வழக்கில், பி.ஜே. குரியனுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்க

Updated On :12 மார்ச் 2013, 3:28 am IST

சூரியநெல்லி பாலியல் பலாத்கார வழக்கில், பி.ஜே. குரியனுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்க அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மகிளா சங்க பொதுச் செயலாளர் கமலா சதானந்தன் சார்பில் இது தொடர்பான மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதிகள் மஞ்சுளா செல்லூர், வினோத் சந்திரன் ஆகியோரடங்கிய அமர்வு, "மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியனுக்கு எதிராக, சூரியநெல்லி பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்ந்த வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் மாஜிஸ்திரேட் மற்றும் உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு சமர்ப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.

1996ஆம் ஆண்டு, சூரியநெல்லியைச் சேர்ந்த சிறுமி, 40 பேர்களால் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில், பாதிக்கப்பட்ட அச்சிறுமி குரியனுக்கும் இதில் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.