இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

போதைப் பொருள் விவகாரம்: விஜேந்தரிடம் விசாரணை

ரூ. 140 கோடி போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில், ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற

Updated On :12 மார்ச் 2013, 3:29 am IST

ரூ. 140 கோடி போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில், ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற விஜேந்தர் சிங்கிடம் போலீஸôர் திங்கள்கிழமை விசாரணை நடத்தினர்.

"வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் குறிப்பிடப்படும் அனூப் சிங் கலோன் வீட்டின் அருகே, விஜேந்தரின் கார் நின்று கொண்டிருந்தது தொடர்பாக விஜேந்தரிடம் 2 அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், விஜேந்தரும் நானும் ஊட்டச்சத்து என நினைத்து குறைந்த அளவு போதை மருந்தை உட்கொண்டோம் என்று அவரது நண்பர் ராம் சிங் கூறியது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது' என பஞ்சாப் போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

விஜேந்தரிடம் எந்த இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது என்பதைத் தெரிவிக்க போலீஸôர் மறுத்து விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.