இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

ஹைதராபாத் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட சைக்கிளின் வரைபடம் வெளியீடு

ஹைதராபாதில் நடந்த இரட்டைக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் குண்டு வைக்கப் பயன்படுத்தப்பட்ட சைக்கிளின்

Updated On :12 மார்ச் 2013, 3:30 am IST

ஹைதராபாதில் நடந்த இரட்டைக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் குண்டு வைக்கப் பயன்படுத்தப்பட்ட சைக்கிளின் வரைபடத்தைப் போலீஸார் திங்கள்கிழமை வெளியிட்டனர்.

சைபராபாத் காவல்துறை ஆணையர்  துவாரகா திருமலா ராவ், சைக்கிளின் வரைபடத்தை வெளியிட்டார். இது குறித்து அவர் கூறியதாவது: சைக்கிளின் பின்பக்கம் அதிகளவு சேதமடைந்திருந்ததால், பின்பக்கத்தில் குண்டு வைத்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

சைக்கிளின் பிரதானச்  சட்டம், ஹேண்டில் பார், பம்பர்கள், போர்க் ஆகியவை அட்லஸ் நிறுவன தயாரிப்புகள். முன் சக்கர ரிம் உஷா நிறுவனத்தின் தயாரிப்பு. முன் சக்கரத்தில் பயன்படுத்தப்பட்ட டயர் கங்கா நிறுவனத்தால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தயார் செய்யப்பட்டது.

முன் சக்கர டியூப் கங்கா நிறுவனத்தால் கடந்த அக்டோபரில் தயாரிக்கப்பட்டது. சைக்கிளின் செயின், கே.டபிள்யூ, பிரிட்டனில் தயாரானது. இந்த தயாரிப்பானது 3 ஆண்டுகளுக்கு முன் சந்தையில் கிடைத்துள்ளது. அதன் பிறகு உற்பத்தி செய்யப்படவில்லை. பிப்ரவரி 21ஆம் தேதி நிகழ்ந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள், குண்டு வெடிப்புக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.