ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

யாரையும் குறி வைத்து சோதனை நடத்தவில்லை: சிபிஐ

சென்னையில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை நடத்திய சோதனை, யாரையும் குறி வைத்து

Updated On :22 மார்ச் 2013, 1:29 am IST

சென்னையில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை நடத்திய சோதனை, யாரையும் குறி வைத்து உள்நோக்கத்துடன் நடத்தப்பட்டதல்ல என்று சிபிஐ  தலைமையகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக தில்லியில் சிபிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

உரிய வரி செலுத்தாமல் இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த 33 சொகுசு கார்கள் தமிழ்நாட்டில் உள்ளதாக புகார் வந்தது.

இது தொடர்பாக, தமிழ்நாட்டில் 18 இடங்களில் வியாழக்கிழமை சோதனை நடத்தப்பட்டது என்று சிபிஐ செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இது குறித்து தில்லி சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது:

திமுக பொருளாளர் ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கு சொந்தமாக ஹம்மர் கார் இருப்பதாக தெரியவந்து, அங்கு அதிகாரிகள் சென்று தேடினர். ஆனால், அங்கு அந்த கார் இல்லை.

சோதனையில் போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழக வேந்தர் வி. ஆர்.  வெங்கடாசலம் என்பவர்வசம் இருந்த ஏழு கார்கள்; எம்ஜிஎம் குழும நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு கார்கள்; ஜேஆர்ஏ டவர்ஸ் நிறுவனத்தின் ஜான்சனுக்குச் சொந்தமான ஒரு கார்;  ஜி.கே. ஷெட்டி என்பவருக்குச் சொந்தமான ஐந்து கார்கள்; ராஜா சங்கர் என்பவருக்கு சொந்தமான 2 கார்கள் வரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்யப்பட்டவை என்பது கண்டுபிடிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.