தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

பெங்களூரில் பாதிரியார் அடித்துக் கொலை

பெங்களூரில் கிறிஸ்தவ குரு மடத்தில் பாதிரியார் ஞாயிற்றுக்கிழமை இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

Updated On :2 ஏப்ரல் 2013, 3:28 am IST

பெங்களூரில் கிறிஸ்தவ குரு மடத்தில் பாதிரியார் ஞாயிற்றுக்கிழமை இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

பெங்களூர் யஸ்வந்தபுரம் பழைய மைசூர் லேம்ப் சாலையில் புனித செயின்ட் பீட்டர்ஸ் கத்தோலிக்க கிறிஸ்தவ குருமடம் உள்ளது. இங்கு பாதிரியார்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

இதன் முதல்வராக இருந்தவர் உதகமண்டலத்தைச் சேர்ந்த பாதிரியார் தாமஸ் (60). குருமடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கியிருந்த அவரை மர்ம நபர்கள் ஆயுதங்களால் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

தகவல் அறிந்த யஸ்வந்தபுரம் போலீஸார் தாமஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

பெங்களூர் மாநகரக் காவல் துறை ஆணையர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி, துணை ஆணையர் சித்தராமையா, பெங்களூர் கத்தோலிக்க மறை மாவட்டப் பேராயர் பெர்னார்ட் மோரஸ் ஆகியோர் பார்வையிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.