திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

எல்லையில் சீன ராணுவம் பிடிவாதம்: ஆக்கிரமித்த பகுதியிலிருந்து பின்வாங்க மறுப்பு

இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்துள்ள சீன ராணுவம் தொடர்ந்து அந்தப் பகுதியிலிருந்து வெளியேற மறுத்து வருகிறது.

News image
Updated On :2 மே 2013, 2:10 am

இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்துள்ள சீன ராணுவம் தொடர்ந்து அந்தப் பகுதியிலிருந்து வெளியேற மறுத்து வருகிறது. தெüலத் பெக் ஒல்டி பகுதியில் கூடாரம் அமைத்துள்ள சீன ராணுவத்தினர் இப்போது அப்பகுதியில் 5 கூடாரங்களை அமைத்துள்ளனர். இந்தக் கூடாரங்களில் உள்ள ராணுவ வீரர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட பொருள்கள் தொடர்ந்து சப்ளை செய்யப்படுகின்றன.

இந்தியப் பகுதியில் தெüலத் பெக் ஒல்டி பகுதியில் 19 கி.மீ. தூரம் சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து மூன்றாவது வாரமாக இப்பகுதியிலிருந்து வெளியேற சீன ராணுவத்தினர் மறுத்து வருகின்றனர்.

இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை சஷுல் பகுதியில் இரு நாடுகளின் பிரிகேடியர் அளவிலான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இப்பிராந்தியம் தங்களுடையதுதான் என சீன தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். இப்பகுதியில் தங்களது உரிமையை இந்திய ராணுவம் கோர முடியாத நிலை உருவாகியுள்ளது. சீன ராணுவத்தின் இப்போதைய நடவடிக்கையானது இரு நாடுகளிடையிலான எல்லை ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று இந்திய ராணுவம் சுட்டிக் காட்டியதோடு, இப்பகுதியிலிருந்து வெளியேறி முந்தைய நிலைக்குச் செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் சீன ராணுவமோ எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள புகுட்சே மற்றும் சுமர் பகுதியில் உள்ள பதுங்கு குழிகளை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என சீன ராணுவம் வலியுறுத்தியது.

இப்போதுள்ள பகுதியிலிருந்து சீன ராணுவம் எவ்வித நிபந்தனையும் இன்றி வெளியேறினால் மட்டுமே பதுங்கு குழிகள் மற்றும் சாலை போடும் பணிகளை நிறுத்த முடியும் என இந்திய தரப்பு திட்டவட்டமாகத் தெரிவித்தவிட்டது.

இதனால் இப்பகுதியில் இந்திய ராணுவம் தனது கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இப்பகுதியில் ஆளில்லா விமானம் மூலமான கண்காணிப்பை இந்தியா மேற்கொண்டு வருகிறது. சீன ராணுவம் தனது ராணுவ வீரர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட பொருள்களை ராணுவ டிரக்குகள் மூலம் அளித்து வருகிறது.

இங்கு அமைக்கப்பட்ட 5 கூடாரங்களில் மொத்தம் 40 சீன மக்கள் ராணுவப்படை வீரர்கள் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்பிராந்தியத்தில் கூடுதல் ராணுவ பிரிவுகளை நிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

இதனிடையே சீனாவுக்குச் சென்றுள்ள இந்திய குழுவினர், இரு நாட்டு ராணுவமும் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட ஒப்புக் கொண்டதாகக் கூறப்பட்டது. ஜூலை மாதம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டபோதிலும் அதற்கான தேதி பின்னர் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

இரு நாட்டு ராணுவமும் இணைந்து 2007-ம் ஆண்டு சீனாவில் உள்ள குன்மிங் பகுதியில் கூட்டு ராணுவ ஒத்திகையை நடத்தின. 2008-ம் ஆண்டில் கர்நாடக மாநிலம் பெல்காமில் கூட்டு ராணுவ ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் இது குறுகிய காலத்துக்கு நிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு இந்தியாவில் சீன ராணுவ அமைச்சர் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது இத்தகைய கூட்டுராணுவ ஒத்திகையை மீண்டும் நிகழ்த்த முடிவு செய்யப்பட்டது.

அமைச்சரவைக்கு ராணுவ தலைமை தளபதி விளக்கம்

சீன ஊடுருவல் விவகாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைக்கு இந்திய ராணுவ தலைமை தளபதி விக்ரம் சிங் புதன்கிழமை விளக்கினார்.

சீன ஊடுருவல் விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார் விக்ரம் சிங். இந்நிலையில் இந்த விவகாரத்தில் ராணுவத் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் அமைச்சரவையுடன் கலந்தாலோசித்தார்.

எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ள இந்தியப் படைகளை திரும்பப் பெறுமாறு சீனா வலியுறுத்தி வருகிறது. இரு நாடுகளும் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளன.

சீனா தனது படைகளை திரும்பப் பெறுவதை உறுதி செய்யாமல் இந்தியாவும் தனது எல்லை பாதுகாப்பு கட்டமைப்பை மாற்ற தயாராக இல்லை.

பிரிகேடியர் நிலையில் உள்ள இரு நாட்டுப் படைப்பிரிவுத் தலைவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.