கருணை மனு தாமதமாக நிராகரிக்கப்பட்டதைக் காரணம் காட்டி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவருக்கு ஆயுள்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.
அசாம் மாநிலத்தில் இரட்டை கொலை வழக்கு ஒன்றில் சரணடைந்த எம்.என். தாஸ் என்பவருக்கு 1997-ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 1998-ஆம் ஆண்டு குவாஹாட்டி உயர்நீதிமன்றமும் 1999-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றமும் இந்த தூக்கு தண்டனையை உறுதி செய்தன.
இதைத் தொடர்ந்து 1999-ஆம் ஆண்டு எம்.என்.தாஸ் தன்னுடைய தண்டனையைக் குறைக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். இந்த மனுவை 2011-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவராக இருந்த பிரதீபா பாட்டீல் நிராகரித்தார். தனது கருணை மனுவை 12 ஆண்டு காலம் கழித்து தாமதமாக நிராகரித்ததால் தன்னுடைய தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் எம்.என்.தாஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை ஜி.எஸ். சிங்வி தலைமையிலான அமர்வு நீதிமன்றம் புதன்கிழமை விசாரித்தது. எம்.என்.தாஸின் கருணை மனுவை காலதாமதமாக குடியரசுத் தலைவர் நிராகரித்ததால் தாஸின் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றுவதாக தீர்ப்பளித்தது.
அண்மையில் காலிஸ்தான் இயக்க தலைவர் தேவேந்தர் சிங் புல்லரின் வழக்கில், தண்டனை குறைப்புக்கு கருணை மனு தாமதமாக நிராகரிக்கப்படுவதை காரணமாக ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்புக்கு வரவேற்பு: உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ஆசிய மனித உரிமைகளுக்கான மையம் வரவேற்றுள்ளது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, நாட்டில் மரண தண்டனையை முற்றிலும் ஒழிப்பதற்கு முன்னோடியாக அமைந்துள்ளது. மரண தண்டனை என்பது நீதியை நிலைநாட்டுவதற்கான ஒரே வழி அல்ல என அந்த மையத்தின் இயக்குநர் சுஹாஸ் சக்மா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் காலிஸ்தான் இயக்க தேவேந்தர் சிங் புல்லரின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இந்த மனித உரிமைகள் மையம் கருணை மனு அனுப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்ஐகே வசூல் எவ்வளவு?
முந்தி நிற்கும் முதல்வர் வேட்பாளர் ? | MK Stalin | EPS | NTK Seeman | TVK Vijay | TN Election 2026

வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!

பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

