2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) அளித்த வரைவு அறிக்கையை அக்குழுவில் இடம் பெற்றிருந்த எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர்.
முன்னதாக பாஜக, ஐக்கிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக, திமுக, பிஜு ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஜேபிசி உறுப்பினர்கள் கடந்த வாரம் மக்களவைத் தலைவர் மீரா குமாரை சந்தித்தனர். அப்போது ஜேபிசி தலைவர் பி.சி.சாக்கோ, ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும், அவர் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில் அக்கட்சிகளைச் சேர்ந்த ஜேபிசி உறுப்பினர்கள் ஜேபிசி செயலகத்துக்கு தனித்தனியாக கடிதங்கள் எழுதியுள்ளனர். அதில் 2ஜி அலைக்கற்றை தொடர்பாக ஜேபிசி விசாரணை நடத்தி அளித்த வரைவு அறிக்கையை தாங்கள் நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஜேபிசி மொத்தம் 30 உறுப்பினர்களைக் கொண்டது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஜேபிசி வரைவு அறிக்கையில் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் மீது எந்த தவறும் இல்லை என்றும், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா மீதுதான் தவறு என்றும் கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக பாஜக மூத்த தலைவரும், ஜேபிசி உறுப்பினர்களில் ஒருவருமான யஷ்வந்த் சின்ஹா கூறியது: ஜேபிசி தலைவர் பி.சி. சாக்கோ மீதான நம்பிக்கையின்மையை உறுப்பினர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற 2ஜி ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.42 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது மட்டுமே அந்த அறிக்கையை நாங்கள் முழுமையாக நிராகரிக்க காரணமல்ல.
ஜேபிசி-க்கு வேறு தலைவரை நியமிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை, தனக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்று கூறி மக்களவைத் தலைவர் மீரா குமார் நிராகரித்துவிட்டார் என்று வெளியான செய்திகள் உண்மையல்ல என்று யஷ்வந்த் சின்ஹா கூறினார்.
ஜேபிசி வரைவு அறிக்கையை நிராகரித்துள்ள 15 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவரம்: யஷ்வந்த் சின்ஹா, ஜஸ்வந்த் சிங், கோபிநாத் முண்டே, ரவி சங்கர் பிரசாத், ஹரேன் பட்னாக், தர்மேந்திர பிரதாப் (அனைவரும் பாஜக), சரத் யாதவ், பி.சி.சின்ஹா (இருவரும் ஐக்கிய ஜனதா தளம்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), குருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்யூனிஸ்ட்), கல்யாண் பானர்ஜி (திரிணமூல் காங்கிரஸ்), தம்பிதுரை (அதிமுக), டி.ஆர்.பாலு, டி.சிவா (இருவரும் திமுக), அர்ஜுன் சரன் சேத்தி (பிஜு ஜனதா தளம்).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்ஐகே வசூல் எவ்வளவு?
முந்தி நிற்கும் முதல்வர் வேட்பாளர் ? | MK Stalin | EPS | NTK Seeman | TVK Vijay | TN Election 2026

வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!

பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

