மீளமுடியாத கோமா நிலையில் உயிருக்குப் போராடிவரும் சரப்ஜித் சிங்கை உடனே விடுதலை செய்யுமாறு பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
லாகூர் மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் சரப்ஜித் சிங்கின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவரை விடுவிக்க சட்ட நுணுக்கங்களையும், நிர்வாகக் காரணங்களையும் ஆராய இது சரியான தருமணல்ல. மனிதாபிமான அடிப்படையிலும் கருணை அடிப்படையிலும் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும். இதன் மூலம் அவருக்கு இந்தியாவில் சிறப்பான சிகிச்சை அளிக்க இயலும் அல்லது வேறு ஒரு நாட்டுக்கு அனுப்பி சிகிச்சை அளிக்க இயலும் என்று பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் சரத் சபர்வால், பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் ஜலீல் அப்பாஸ் ஜிலானியிடம் கேட்டுக்கொண்டார்.
லாகூர் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரான சரப்ஜித் சிங் லாகூர் கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவரை சக கைதிகள் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் லாகூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலை சீராகவில்லை. இதற்கிடையே அவரது சகோதரி தல்பிர் கெளர், மனைவி சுக்பிரீத் கெளர், மகள்கள் பூனம் மற்றும் ஸ்வபன்தீப் கெளர் உள்ளிட்டோர் லாகூருக்குச் சென்று சரப்ஜித் சிங்கை மருத்துவமனையில் சந்தித்தனர்.
அவரை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் அல்லது இந்திய மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கவேண்டும் என அவரது சகோதரி தல்பிர் கெளர் கோரியிருந்தார். இதற்கிடையே அவரது நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படாத காரணத்தால்
சரப்ஜித் சிங் சகோதரி, மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் புதன்கிழமை வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு திரும்பினர்.
இந்திய அரசு எதுவும் செய்யவில்லை என புகார்: சிறையில் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடும் சரப்ஜித் விவகாரத்தில் இந்திய அரசு எதுவும் செய்யவில்லை என சரப்ஜித் சிங்கின் சகோதரி தல்பிர் கௌர் புகார் தெரிவித்துள்ளார். சரப்ஜித்துக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறையில் எனக்கு சந்தேகம் உள்ளது. அவரது உயிரை இந்திய அரசு மனது வைத்தால் காப்பாற்ற முடியும். பாகிஸ்தான் அரசுக்கு உரிய அழுத்தம் தந்தால் இந்திய மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கலாம். சிறையில் சரப்ஜித் எப்படி தாக்கப்பட்டார், கைதிகளுக்கு எப்படி செங்கல் உள்ளிட்ட ஆயுதங்கள் கிடைத்தன. இதுகுறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும்.
சரப்ஜிதின் உடல்நிலை தொடர்பான அறிக்கையைக் கேட்டால் டாக்டர்கள் எங்களிடம் தெரிவிக்க மறுத்துவிட்டனர். தலிபான் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட மலாலாவுக்கு லண்டனில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சரப்ஜித் சிங்குக்கு ஏன் சிகிச்சை தர முடியாது. இப்பிரச்னையில் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க உள்ளோம் என்றார் தல்பிர் கெளர்.
லாகூர் உயர்நீதிமன்றத்தில் மனு: சரப்ஜித் சிங்குக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு உதவ, இந்தியாவில் இருந்து டாக்டர்களை அனுமதிக்க வேண்டும் என லாகூர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்ய உள்ளதாக அவரது வழக்குரைஞர் அவாய்ஸ் ஷேக் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


