"தமிழக, ஆந்திர பிரதேச மாநில சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவித்து, இலங்கை சிறைகளில் உள்ள ராமேசுவரம், காரைக்கால் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்று பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை இணை அமைச்சர் வே. நாராயணசாமி கூறினார்.
தில்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது:
புதுச்சேரி-காரைக்காலைச் சேர்ந்த 26 மீனவர்கள், ராமேசுவரத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள் உள்ளிட்டோரை இலங்கைக் கடற்படையினர் கடந்த மாதம் நடுக்கடலில் கைது செய்தனர். இலங்கை சிறைகளில் ஒரு மாதமாக அவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை விடுவிப்பது குறித்து இலங்கை அமைச்சர் ஆறுமுக தொண்டைமானுடன் தொலைபேசியில் பேசினேன்.
இந்த விஷயம் தொடர்பாக அதிபர் மகிந்த ராஜபட்சவைச் சந்தித்து மீனவர்களை மீட்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்திருந்தார். இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் சிறைகளில் உள்ள தமிழக, புதுச்சேரி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









