நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக சி.பி.ஐ.க்கு இதுவரை 730 கோப்புகள் வழங்கி உள்ளதாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக இதுவரை 730 கோப்புகள், வழங்கப்பட்டன. மேலும் 10 கோப்புகள் எங்களிடம் உள்ளன. அவற்றையும் பெற்றுக் கொள்ளுமாறு சி.பி.ஐ.க்கு தெரிவித்துள்ளோம்.
கடந்த 2004-ம் ஆண்டுக்கு முந்தைய சுரங்க ஒதுக்கீடு தொடர்பான 25 கோப்புகள் காணாமல் போய்விட்டன. அவற்றை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சி.பி.ஐ.க்கு தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சுரங்கங்களை ஒதுக்கக் கோரும் விண்ணப்பங்கள் தொடர்பான ஆவணங்களும் காணவில்லை. அவற்றை தேடிக் கண்டுபிடித்து சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்போம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீடு: தேர்தல் நேரத்தில் அவையைக் கூட்டுவது அவசியமா? - திமுக

எல்ஐகே வசூல் எவ்வளவு?
முந்தி நிற்கும் முதல்வர் வேட்பாளர் ? | MK Stalin | EPS | NTK Seeman | TVK Vijay | TN Election 2026

வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

