தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ள மத்திய அரசின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

Updated On :1 மே 2013, 8:32 pm

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ள மத்திய அரசின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

அரசின் இந்த முடிவை எதிர்த்து வழக்குரைஞர் எம்.எல். சர்மா என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

சில்லறை விற்பனையை கட்டுப்படுத்தும் சம்பந்தப்பட்ட சட்டவிதிகளில் எவ்வித திருத்தமும் கொண்டு வராமல் வெறும் பத்திரிகை அறிக்கை வாயிலாக சில்லறை வர்த்கத்தில் அன்னிய முதலீடு அறிமுகம் செய்யப்பட்டது என்று மனுவில் சர்மா குறிப்பிட்டிருந்தார்.

நுகர்வோரின் நலனுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ள நீதிமன்றம், சில்லறை வர்த்தகத்தில் இடைத் தரகர்கள் என்பவர்கள் விரோதிகள், பொருளாதாரத்தை அட்டை போல உறிஞ்சுபவர்கள். அவர்களை நீக்குவதன் மூலம்தான் உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும் அதிக பலன் கிடைக்கும் என்று இந்த மனு மீதான விசாரணையின் போது நீதிமன்றம் கூறியுள்ளது.

அரசு எடுக்கும் ஒரு கொள்கை முடிவு, அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமாக இருந்தால் மட்டுமே நீதிமன்றம் அதில் தலையிட முடியும் என்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.

பல இலச்சினை சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதன் மூலம் இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள். இதன் மூலம் நுகர்வோரும், உற்பத்தியாளர்களும் நன்மையடைவார்கள். விவசாயிகளிடம் இருந்து கிலோ ஒரு ரூபாய் விலையில் வாங்கப்படும் வெங்காயம் சந்தையில் ரூ.25-க்கு விற்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பாக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், சீனா, ஹாங்காங், இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டது நன்மை அளித்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டது. அதனை உதாரணமாகக் கூறிய நீதிபதிகள், அதே போன்ற நன்மைகள் இந்தியாவிலும் ஏற்படும் என்றும் ஏன் எதிர்பார்க்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினர்.

ஒரு வேளாண் பொருளுக்கு நுகர்வோரிடம் பெறும் விலையில் 12 முதல் 15 சதவீதம் வரையே விவசாயிகளைச் சென்றடைகிறது. மீதமுள்ளவற்றை நடுவில் உள்ள இடைத்தரகர்களே பகிர்ந்து கொள்கின்றனர் என்று உலக வங்கியின் அறிக்கையும் அரசு சார்பில் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.