நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

தேவையற்ற சர்ச்சையைத் தவிர்க்கவே ராஜிநாமா செய்தேன்

தேவையற்ற சர்ச்சையைத் தவிர்க்கவே சட்டத்துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ததாக அஸ்வனிகுமார் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :12 மே 2013, 4:43 am IST

தேவையற்ற சர்ச்சையைத் தவிர்க்கவே சட்டத்துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ததாக அஸ்வனிகுமார் தெரிவித்துள்ளார்.

நிலக்கரிச் சுரங்கம் தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ.யின் அறிக்கையில் திருத்தங்கள் செய்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததன் தொடர்ச்சியாக, சட்டத்துறை அமைச்சர் பதவியை விட்டு அஸ்வனிகுமார் விலக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அவர் தில்லியில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது:

நான் எனது பதவி விலகல் கடிதத்தை வெள்ளிக்கிழமை பிரதமரிடம் அளித்தேன். அவரது குழுவில் எனக்கும் வாய்ப்பளித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள ஒரு விவகாரத்தில் தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்கவே நான் ராஜிநாமா செய்தேன்.

எனினும் இந்த விவகாரத்தில் என் மீது நீதிமன்றத்தால் எதிர்மறையான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனது மனசாட்சி தெளிவாக இருக்கிறது. வாய்மையும் நீதியும் வெல்லும் என்பதால் நான் குற்றமற்றவன் என்பது நிரூபணமாகும்.

பிரதமரும் கட்சி மேலிடமும் எது சரி என்று கருதியதோ அதை நான் செய்தேன். கட்சியின் நம்பகமான விசுவாசி என்ற முறையில் நான் பெருமிதம் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் நான் பலிகடாவாக்கப்பட்டேனா? என்று கேட்கிறீர்கள். அது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. இது குறித்து மக்கள் தீர்மானிக்கட்டும். எனது ராஜிநாமா என்பது, ஏதோ தவறு நடந்துள்ளது என்பதை உணர்த்தவில்லை.

நான் பதவி விலகியது, கட்சித் தலைவரின் நம்பிக்கையை நான் இழந்து விட்டேன் என்பதைக் காட்டவில்லை. "சி.பி.ஐ. விசாரணை அறிக்கையின் இதயம் போன்ற பகுதி திருத்தப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் எவ்வாறு என் தரப்பை முன்வைக்கப் போகிறேன்?' என்று கேட்கிறீர்கள். இந்த விஷயத்தில், சில அம்சங்களை மட்டுமே ஊடகங்கள் பெரிதாகக் காட்டுகின்றன. மற்ற முக்கியமான விஷயங்களைக் கண்டுகொள்ளவில்லை. என் மீது குற்றம் சாட்டுவதற்கு முன், செய்தியாளர்களாகிய நீங்கள் முதலில் உச்ச நீதிமன்றத்தின் கருத்துகளை முழுமையாகப் படித்துப் பாருங்கள் என்றார் அஸ்வனிகுமார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்: இதனிடையே, தம்மைப் பற்றி உச்ச நீதிமன்றம் எதிர்மறையான கருத்து எதையும் கூறவில்லை என்று அஸ்வனிகுமார் கூறியதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ""இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளபோதிலும், ஒரு முன்னாள் சட்ட அமைச்சர் அப்படி எதுவும் இல்லை என்கிறார். இதற்கு நான் என்ன கருத்து சொல்வது? அட்டர்னி ஜெனரலும் அவர் மீது குற்றம் சாட்டினார்.

சி.பி.ஐ. இயக்குநருடனான சந்திப்பை நடத்த உத்தரவிட்டவர் அஸ்வனிகுமார்தான் என்று அவர் கூறினார். அப்படி உத்தரவிட சட்ட அமைச்சருக்கு என்ன அதிகாரம் உள்ளது? என்று உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது'' என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறுகையில், ""அஸ்வனிகுமார் கூறுவதை நான் ஏற்கவில்லை. தனது நிலைப்பாடு பலவீனமாக இருப்பது தெரிந்தும் அதை நியாயப்படுத்த அவர் முயல்கிறார்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.