காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளைக் காவிரி மேற்பார்வைக் குழு பின்பற்றக் கூடாது என்று கர்நாடக அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கர்நாடக தலைமைச் செயலர் எஸ்.வி. ரங்கநாத், காவிரி மேற்பார்வைக் குழுவின் தலைவர் சர்காருக்கு 48 பக்கங்கள் கொண்ட கடிதத்தை அனுப்பியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மார்ச் மாதம் மனு தாக்கல் செய்தது. இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், காவிரி மேற்பார்வைக் குழுவை அமைக்க வேண்டும் என்று மட்டும் உத்தரவிட்டது.
தற்போது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை காவிரி மேற்பார்வைக் குழு பின்பற்றுவதால் அது மேலாண்மை வாரியத்தை மறைமுகமாக அமைப்பதற்கு சமமாகும். தமிழகத்துக்குத் தேவையான 192 டிஎம்சி நீரை ஆண்டுதோறும் கர்நாடகம் வழங்கிய பின்னர் மீதமுள்ள நீரைக் கர்நாடகம் தனது பயன்பாட்டுக்குப் பயன்படுத்தி கொள்ளலாம், அதில் மேற்பார்வைக் குழு தலையிட முடியாது.
சம்பந்தப்பட்ட மாநிலத் தலைமைச் செயலர்களைத் தவிர, அதே மாநிலத்தைச் சேர்ந்த வேறு அதிகாரிகள் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று கடிதத்தில் கர்நாடகம் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொரட்டூரில் குடிநீா் வாரிய பணிகள்: மேலாண்மை இயக்குநா் ஆய்வு

கிண்டி பொறியியல் கல்லூரியில் ‘பொறியியல் திறன் பயிற்சி மையம்’ : அண்ணா பல்கலை.-பஜாஜ் ஆட்டோ புரிந்துணா்வு

தமிழக கோயில்களில் இணையவழி முன்பதிவு தரிசன முறை அமல்படுத்தப்பட இருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...







