சிபிஐக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வகைசெய்யும் மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில் சிபல் புதன்கிழமை தெரிவித்தார்.
சிபிஐக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கிடும் வகையில் அதற்குரிய சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது பற்றி நாடாளுமன்றமே விவாதம் நடத்தி முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இதை தெரிவித்தார் கபில் சிபல்.
இது தொடர்பாக நிருபர்களிடம் கபில் சிபல் கூறியதாவது: இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே மத்திய அமைச்சரவையில் விவாதித்துள்ளோம்.
இதற்காக தில்லி சிறப்பு காவல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கான கருத்துருவுக்கு அமைச்சரவை அனுமதி தந்துள்ளது.
இனி மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும். அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த பிரமாணப்பத்திரத்தில் உள்ளபடி மசோதா தயாரிக்கப்படும். கூடிய விரைவில் இந்த மசோதாவை அரசு கொண்டுவரும். மற்றபடி சட்டம் இயற்றவேண்டியது நாடாளுமன்றம்தான். பிரமாணப் பத்திரம் மீது உச்ச நீதிமன்றம் உரிய முடிவு எடுத்தபிறகு மசோதா தாக்கல் செய்யப்படும் என்றார் கபில் சிபல். முன்னதாக உச்சநீதிமன்றம், சிபிஐ அமைப்பை தன்னாட்சி பெற்ற அமைப்பாக மாற்ற மத்திய அரசு முனைப்பு காட்டிவருவதற்கு புதன்கிழமை திருப்தி தெரிவித்தது.
நீதிபதி ஆர்.எம்.லோதா அடங்கிய அமர்வு, வெளியார் குறுக்கீடு இன்றி சிபிஐ சுதந்திரமாக செயல்படுவதை உறுதிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை தொடங்கியுள்ளதை பாராட்டியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


