மணிப்பூரில் இந்திய-மியான்மர் எல்லை அருகே உள்ள பாதுகாப்பு நிலைகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் சுமார் 100 பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இம்மாநிலத்தின் சான்டெல் மாவட்டத்தில் தொலைதூரப் பகுதியான ஆய்கெஜாங் என்ற இடத்தில் அமைந்துள்ள அசாம் துப்பாக்கிப் படைப் பிரிவின் 35-ஆவது பாதுகாப்பு நிலையை பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை திடீரென சுற்றி வளைத்து, தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். இருதரப்புக்கும் இடையே ஒரு மணி நேரம் சண்டை நீடித்தது. பாதுகாப்புப் படையினரின் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல், பயங்கரவாதிகள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் தப்பியோடி விட்டனர்.
வீட்டின் மீது குண்டு வீச்சு: மேற்கு இம்பால் மாவட்டத்தில், உரிபோக் என்ற இடத்தில் உள்ள இம்பால் நகர கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.கே.மொபிஸானா வீட்டின் மீது செவ்வாய்க்கிழமை மாலை சக்திவாய்ந்த குண்டு வீசப்பட்டது. ஆனால் அந்தக் குண்டு வெடிக்க வில்லை. இந்தக் குண்டை வீசியது பயங்கரவாதிகளா அல்லது வேறு எவருமா? என்று தெரியவில்லை என அதிகாரிகள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுக்கு ரூ. 3,000 கோடி வழங்குவதாக பரவும் செய்தி பொய்! டிரம்ப்

உணவை சூடாக்கிச் சாப்பிடலாமா? குடல் தொற்றுக்கும் ஃபுட் பாய்சனுக்கும் வித்தியாசம் என்ன?
மக்களின் பாதுகாப்பு பிரச்னைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? மு.க. ஸ்டாலின் கேள்வி!






