மழை, வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவால் கடும் பாதிப்புக்குள்ளான உத்தரகண்டில் இதுவரை 11,600 பேர் காணாமல் போயிருக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணைத் தலைவர் சசிதர் ரெட்டி புதன்கிழமை கூறியதாவது: உத்தரகண்ட் பேரழிவில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து தவித்து வருகிறார்கள். ராணுவத்தினரும் மீட்புக் குழுவினரும் சிறப்பாகச் செயல்பட்டு ஆயிரக்கணக்கானோரை காப்பாற்றியுள்ளனர்.
இருப்பினும் இதுவரை 11,600 பேரை காணவில்லை என தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அவர்களுடைய அறிக்கையை அப்படியே ஏற்றுக்கொள்ளவும் முடியாது; ஆனால் அதே சமயம் அவர்கள் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையை புறக்கணித்துவிடவும் முடியாது.
அரசுத் தரப்பில் இதுவரை 4,000 பேரை காணவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் பட்டியலை அரசு அதிகாரிகள் இன்னும் பட்டியலிட்டு வருகிறார்கள் என்றார் சசிதர் ரெட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









