தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

குடியரசுத் தலைவர் ஆட்சியை திரும்பப் பெற ஜார்க்கண்ட் ஆளுநர் பரிந்துரை

ஜார்க்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியைச் திரும்பப் பெற வேண்டுமென்று ஆளுநர் சையது அகமது, மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளார்.

Updated On :11 ஜூலை 2013, 7:56 pm

ஜார்க்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியைச் திரும்பப் பெற வேண்டுமென்று ஆளுநர் சையது அகமது, மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளார்.

மாநிலத்தில் புதிய அரசு அமைக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) கட்சி செவ்வாய்க்கிழமை உரிமை கோரியது, இதையடுத்து ஆளுநர் இவ்வாறு பரிந்துரைத்துள்ளார்.

ஜே.எம்.எம். கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ஹேமந்த் சோரன், தனக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை ஆளுநரிடம் அளித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

82 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட்டில் ஆட்சி அமைக்க 43 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. இந்நிலையில் காங்கிரஸ், லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் சில சிறிய கட்சிகள் ஜே.எம்.எம். கட்சிக்கு ஆதரவளித்துள்ளன. முன்னதாக ஜார்க்கண்ட்டில் பாஜக- ஜே.எம்.எம். கூட்டணி ஆட்ச்சியில் இருந்தது.

ஆட்சிக்கான ஆதரவை ஜே.எம்.எம். வாபஸ் பெற்றதால், ஜனவரி 18-ல் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 6 மாதத்தில் அதாவது ஜூலை 18-ம் தேதியுடன் குடியரசுத் தலைவர் ஆட்சியும் முடிவடைய இருந்தது. இதனால் ஜார்க்கண்ட் பேரவைக்கு மறுதேர்தல் நடைபெறும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் புதிய கூட்டணி உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.