தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஜூலை 15-ஆம் தேதிக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தள்ளிவைத்தது.
இது தொடர்பான வழக்கு தீர்ப்பாயத்தின் தலைவரும் நீதிபதியுமான ஸ்வதேந்தர் குமார், நிபுணர் உறுப்பினர் டி.கே. அகர்வால், ஜி.கே. பாண்டே, ஆர்.சி. திரிவேதி அடங்கிய அமர்வு முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, கடந்த மே 31-ஆம் தேதி தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின்படி, ஸ்டெர்லைட் ஆலையில் நான்கு பேர் அடங்கிய நிபுணர் குழு நடத்திய ஆய்வின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆலை செயல்பட எதிர்ப்புத் தெரிவித்து வரும் தமிழக அரசு சார்பில் வழக்குரைஞர் சுப்பிரமணியம் பிரசாத், மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்டோர் ஆஜராயினர். இவர்கள் அனைவரும் நிபுணர் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கை தொடர்பாகக் கருத்து தெரிவிக்க அவகாசம் கோரினர்.
இதையடுத்து, ஆலை நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அரிமா சுந்தரம், "தீர்ப்பாயத்தின் முந்தைய உத்தரவின்படி ஆலையில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரத்தை வரும் ஜூலை 15-ஆம் தேதி துண்டிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது' என்று முறையிட்டார்.
அதைக் கேட்ட நீதிபதி ஸ்வதேந்தர் குமார் பிறப்பித்த உத்தரவு:
"ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழு நடத்திய ஆய்வறிக்கையை தீர்ப்பாயம் பதிவு செய்து கொள்கிறது. இந்த விவகாரத்தில் நிபுணர் குழு அளித்த அறிக்கை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவு ஆகியவை அடிப்படையில்தான் ஆலை நிர்வாகத்தின் மனு விசாரிக்கப்படுகிறது. வழக்கின் தன்மை அடிப்படையில் முடித்து வைக்கப்பட்ட முந்தைய விசாரணையின் வாதங்களை தீர்ப்பாயம் மறுபரிசீலனை செய்யாது என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. அதன்பேரில் இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 15-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது' என்று உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீடு: தேர்தல் நேரத்தில் அவையைக் கூட்டுவது அவசியமா? - திமுக

எல்ஐகே வசூல் எவ்வளவு?
முந்தி நிற்கும் முதல்வர் வேட்பாளர் ? | MK Stalin | EPS | NTK Seeman | TVK Vijay | TN Election 2026

வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

