தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாக்பூரில் 8வயது, 17 வயது சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: 2 இளைஞர்கள் கைது

மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் வெவ்வேறு இடங்களில் இரண்டு  சிறுமிகள் ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில்

News image
Updated On :17 ஜூன் 2014, 9:06 am

வேல்முருகன்

மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் வெவ்வேறு இடங்களில் இரண்டு  சிறுமிகள் ஏமாற்றி பாலியல்பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நாக்பூர் அருகே பிப்லா என்ற கிராமத்தில் துஷார் மிஸ்கின் (24) என்பவர், மிட்டாய் வாங்கி கொடுப்பதாக கூறி 8 வயது சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீஸார் துஷார் மிஸ்கின் கைது செய்தனர்.

மற்றொரு சம்பவம்: பந்த்தாரா மாவட்டத்தைச் சேர்ந்த சமித் சதிபாப்னே(26) என்பவர்  நாக்பூர் அருகே உள்ள திகோரி என்ற கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடந்த 2013 செப்டம்பர் மாதம் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த பெண் கோரியதகாவும், அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.. இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து சமித் கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.