பேஸ்புக்கில் செல்போன் எண்ணுடன் ஆபாசமாக தனது புகைப்படம் வெளியானதால் 18 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கொல்கத்தாவின் பர்னாஸ்ரீயில் உள்ள ஒரு பள்ளியில் 18 வயது மாணவி 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். அவருடைய ஆபாச படம் சமூக வளைதளமான பேஸ்புக்கில் வெளியாகியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மாணவியின் படத்தை மார்பிங் செய்த அவரது ஆண் நண்பர் இம்ரான்கான், ஆபாசமாக வெளியிட்டுள்ளார். மேலும் அவரது செல்போன் எண்ணையும் வெளியிட்டுள்ளார் என்பது மாணவிக்கு தெரியவந்தது. தனது ஆண் நண்பர் பேஸ்புக்கில் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்ததை எண்ணி மனம் வெதும்பிய மாணவி, அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்யும் முன் தன் சாவுக்கு காரணம் என்று இம்ரான் கான் பெயரை குறிப்பிட்டு 6 பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீஸார், தற்கொலைக்கு காரணமான கைசல் இம்ரான் கான் மற்றும் அவருடைய நண்பர்கள் தீபக் மற்றும் சதீஷ் உள்ளிட்டோரை கைது செய்தனர்.