தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

புல்லட் ரயில்: ரூ.53,440 கோடியில் ஜப்பானுடன் இந்தியா விரைவில் ஒப்பந்தம்

மும்பை- ஆமதாபாத் இடையே இயக்கபடவிருக்கும் முதல் புல்லட் ரயில் பணிகளுக்காக ரூ. 53,440 கோடியில் ஜப்பானுடன் இந்தியா விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளவிருக்கிறது.

News image
Updated On :8 டிசம்பர் 2015, 12:49 pm

மும்பை- ஆமதாபாத் இடையே இயக்கபடவிருக்கும் முதல் புல்லட் ரயில் பணிகளுக்காக ரூ. 53,440 கோடியில் ஜப்பானுடன் இந்தியா விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளவிருக்கிறது.

மூன்று நாள் பயணமாக வரும் 11 ஆம் தேதி இந்தியா வரும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும், இந்திய பிரமதர் மோடியும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர்.

இதுகுறித்து ஜப்பானின் வர்த்தக பத்திரிகை "தி நிக்கி' செய்தி வெளியிட்டுள்ளது.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வரும் 11-ஆம் தேதி மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகிறார். அப்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். அப்போது இருநாடுகளிடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

அதில் முக்கியமாக ஜப்பான் உதவியுடன் இந்தியாவில் புல்லட் ரயில் சேவையைத் தொடங்கும் ஒப்பந்தத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திடுகின்றனர்.

இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியமைத்த பிறகு புல்லட் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்தியாவின் வர்த்தக நகரான மும்பை- ஆமதாபாத் இடையே முதல் புல்லட் ரயில் இயக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான நிதியை டோக்கியோ நிதிநிறுவனம் வழங்குகிறது.

2017-ஆம் ஆண்டு தொடங்கும் புல்லட் ரயில் திட்டப் பணிகள் 2013-ஆம் ஆண்டு நிறைவடையும். இத்திட்டத்துக்கான மொத்த மதிப்பீடு ரூ.95,530 கோடியாகும். இதில் ரூ.53,440 கோடியை ஜப்பான் கடனுதவியாக அளிக்கும். 505 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்படும் இத்திட்டத்தினால் தற்போதைய 8 மணி பயண நேரம் 2 மணி நேரமாக  குறையும்.

மும்பை-ஆமதாபாத் புல்லட் ரயிலைத் தொடர்ந்து மேலும் 7 அதிவேக புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

உலக அளவில் ஜப்பானின் புல்லட் ரயில் தொழில்நுட்பத்துக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. இந்தியாவுடன் மேற்கொள்ளப்படுவது ஜப்பானின் 2-ஆவது பெரிய புல்லட் ரயில் திட்ட ஒப்பந்தமாகும். இதற்கு முன்பு 2007-ஆம் ஆண்டில் தைவானுடன் ஜப்பான் மிகப்பெரிய புல்லட் ரயில் ஒப்பந்தத்தை மேற்கொண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.