தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தாஜ்மகால் அருகே மயானம்: விரிவான திட்டம் தயாரிக்குமாறு உ.பி. அரசுக்கு உத்தரவு

தாஜ்மகால் அருகேயுள்ள 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாயானத்தை சீரமைப்பது தொடர்பாக விரிவான திட்டத்தை தயாரிக்குமாறு உத்தர பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :14 டிசம்பர் 2015, 3:02 pm

தாஜ்மகால் அருகேயுள்ள 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாயானத்தை சீரமைப்பது தொடர்பாக விரிவான திட்டத்தை தயாரிக்குமாறு உத்தர பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஆக்ரா அருகேயுள்ள 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மயானத்திலிருந்து வெளியேறும் புகையால், தாஜ்மகால் பாதிப்படைகிறது என உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப், உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் குடும்பத்துடன் தாஜ்மகாலுக்கு சுற்றுலா சென்றிருந்த நீதிபதி குரியன், மயானத்திலிருந்து வெளியேறும் புகையால் தாஜ்மகாலின் வெள்ளை மார்பிள் பாதிக்கப்படுவதை கண்டறிந்தார். எனவே, அந்த மயானத்தை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்துக்கு எழுதியிருந்த கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார்.

இப்பிரச்னை குறித்து விளக்கம் அளிக்குமாறு உத்தர பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு பதில் மனு தாக்கல் செய்த உத்தர பிரதேச அரசு,  அந்த மயானத்தை மின் மயானமாக தகுதி உயர்த்த முடிவு செய்து செய்திருப்பதாகவும், ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் பழைய மயானத்தை அடுத்த ஆண்டு முதல் கைவிடவிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ். தாகுர் மற்றும் நீதிபதி சி.நாகப்பன் ஆகியோர், உத்தர பிரதேச அரசு இப்பிரச்னை குறித்து ஆறு மாதத்துக்குள் விரிவான திட்டம் தயாரிக்குமாறு உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.