ராகுல் காந்தி 'குழந்தை' போல் பேசுகிறார்: ஏ.ஏ.பி. விமர்சனம்

தில்லியில் குடிசைகள் அகற்றப்பட்ட விவகாரத்தில் ராகுல் காந்தி, குழந்தையை போல் பேசுகிறார் என ஆம் ஆத்மி கட்சி விமர்சனம்
ராகுல் காந்தி 'குழந்தை' போல் பேசுகிறார்: ஏ.ஏ.பி. விமர்சனம்
Updated on
1 min read

தில்லியில் குடிசைகள் அகற்றப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குழந்தையை போல் பேசுகிறார் என தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி விமர்சனம் செய்துள்ளது.

எந்த துறை யார் வசம் உள்ளது என்ற விவரமே தெரியவில்லை. காங்கிரஸ் கட்சி ஏன் இந்நிலைக்கு (மக்களவையில் 44 இடங்களே வென்றது) வந்துள்ளது தற்போது தெரிகிறது என அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

வடக்கு தில்லியில்,  ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறி, ரயில்வே நிர்வாகம் குடிசைகளை அகற்றியது. அப்போது, ஆறு மாத பெண் குழந்தை ஒன்று இறந்தது.

இச்சம்பவம் குறித்து இன்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில், ஆம்.ஆத்மி உறுப்பினர்கள் கவனஈர்ப்பு நோட்டீஸ் அளித்தனர். அதை ஏற்பதற்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகஜான் மறுத்துவிட்டார்.

இதையடுத்து நாடாளுமன்றத்தின் வெளியே மகாத்மா காந்தி சிலை அருகே ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் ஏன் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்? தில்லியை அவர்கள்தானே ஆட்சி செய்கிறார்கள்? என்றார்.

இதற்கு பதிலடி தந்துள்ள ஆம் ஆத்மி தலைவர் அசுதோஷ், ராகுல் காந்தியின் கருத்து காங்கிரஸ் கட்சி ஏன் இந்நிலைக்கு (மக்களவையில் 44 இடங்களே வென்றது) வந்துள்ளது என்பது தெரிகிறது என்றார்

தில்லி முதல்வர் அரந்வித் கேஜரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில், ராகுல் இன்னும் குழந்தையாகவே இருக்கிறார். ரயில்வே நிர்வாகம் மத்திய அரசின் கீழ் வருகிறது என அவரது கட்சியினர் யாரும் அவருக்கு கற்றுதரவில்லை என சாடியுள்ளார்.

மற்றொரூ ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங், ராகுல் காந்தி சுய நினைவில்லாமல் இருக்கிறார். நேஷனல் ஹெரல்டு வழக்கில் அவருக்கும் மோடிக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தந்தால் அவர் கேஜரிவால் அரசு மீது குற்றம்சாட்டுகிறார் என்றார்.

ரயில்வே நிர்வாகம், குடிசைகளை அகற்றும் போது ராகுல் காந்தி எங்கே போயிருந்தார். கடந்த காலங்களில் மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த போது இதேபோல குடிசைகள் அகற்றப்பட்டன என்றார்.

இதனிடையே, குடிசை அகற்றப்பட்ட போது ஆறு மாத குழந்தை இறந்தது குறித்து நீதிமன்ற விசாரணைக்கு ஆம் ஆத்மி அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் குறித்து விவாதிப்பதற்கு ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, நேரம் ஒதுக்குமாரு அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com