ஓடிசா மாநில சட்டப் பேரவை விவாதத்தின்போது ஆபாச படம் பார்த்த குற்றச்சாட்டின் பேரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாபா கிஷோர் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஓடிசா பேரவைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கூட்டத்தின், போது, சார்சுகுடா தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தடுக்கப்பட்ட நாபா கிஷோர் தாஸ், தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்தாராம்.
இது பேரவை நிகழ்வுகளை பதிவு செய்து கொண்டிருந்த தொலைகாட்சி காமிராவில் பதிவானது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் வலியுறுத்தினர்.
இந்நிலையில் இன்று காலை பேரவை கூடியது. அப்பபோது பேசிய பேரவைத் தலைவர் நிரஞ்சன் புஜாரி, காங்கிரஸ் உறுப்பினர் நாபா கிஷோர் தாஸ், அவையில் கேள்வி நேரத்தின் போது ஆபாச படம் பார்த்து, அவையின் கண்ணியத்தை கெடுத்து விட்டார். இது மிகவும் கேவலமான செயல், எனவே அவர் பேரவை நடவடிக்கையிலிருந்து ஏழு நாட்கள் சஸ்பெண்ட் செய்வதாக கூறினார்.
தன் மீதான குற்றசாட்டை மறுத்த கிஷோர் தாஸ், இது எனக்கு எதிராக செய்யபட்ட சதி என்றார். மேலும், நான் தற்செயலாக யூடிப்பை ஓப்பன் செய்து விட்டேன். ஸ்மார்ட் போன் அப்படி செயல்படும் என நான் யோசிக்கவில்லை. ஆனால் அந்த இணையதள பக்கத்தில் என்ன இருந்தது என்று எனக்கு தெரியாது என்றார்.
இது எனக்கு எதிரான சதியாகும். நான் எந்த வித விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
‘நரகக் குழிகள்’: இந்தியா குறித்த சா்ச்சைக்குரிய பதிவைப் பகிா்ந்த டிரம்ப்!

ஆற்காட்டில் வாக்களித்த வேட்பாளா்கள்

காஞ்சிபுரத்தில் வாக்களித்த வேட்பாளா்கள்

மீன ராசிக்கு பணவரவு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


